World · 1 outlet covered this

ஹௌதிகளைத் தாக்க கோரிக்கை விடுத்த சௌதி இளவரசர்! நிராகரித்த அதிபர் டிரம்ப்!

How outlets told it

Dinamani652d ago

ஹௌதிகளைத் தாக்க கோரிக்கை விடுத்த சௌதி இளவரசர்! நிராகரித்த அதிபர் டிரம்ப்!

Read at Dinamani
ஹௌதிகளைத் தாக்க கோரிக்கை விடுத்த சௌதி இளவரசர்! நிராகரித்த அதிபர் டிரம்ப்!
Photo: Dinamani

யேமனின் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த வேண்டுமென சௌதி அரேபியா அரசு விடுத்த கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. யேமனில் சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசுப் படைகளுக்கும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹௌதிகளுக்கும் இடையே கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, யேமனின் முக்கிய துறைமுக நகரமான மோக்காவை நேற்று (செப். 10) ஹௌதிகள் கைப்பற்றிய நிலையில், அந்நகரத்தின் மீது இன்று சௌதி படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இதனிடையே, செங்கடல் பகுதியின் நுழைவில் அமைந்துள்ள முக்கிய தீவை ஹௌதிகள் கைப்பற்றியுள்ளனர். இதனால், செங்கடலின் நுழைவு வாயிலான பாப் அல்-மண்டாப் நீரிணை ஹௌதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்களின் தளங்களை விட்டு அரசுப் படைகள் வெளியேறி வருவது குறித்தும், ஹௌதிகளின் முன்னேற்றம் குறித்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் செல்போன் வாயிலாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று மீண்டும் அதிபர் டிரம்ப் உடனான செல்போன் உரையாடலில் ஹௌதிகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்த வேண்டுமென சௌதி இளவரசர் விடுத்த கோரிக்கையை அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், ஹௌதிகள் குறித்த உளவுத் தகவல்களை சௌதிக்கு அமெரிக்கா வழங்கும் எனவும், சௌதி அரேபியாவில் சுமார் 200 அமெரிக்க ராணுவ வீரர்கள் முக்கிய ராணுவப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்காவின் போரில் களமிறங்கிய ஹௌதிகள், அமெரிக்காவின் ஆதரவு நாடான சௌதி அரேபியாவின் கப்பல்கள் செங்கடல் வழியாகச் செல்வதற்குத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.