Health · 1 outlet covered this

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

How outlets told it

Dinamani6539h ago

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

Read at Dinamani
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
Photo: Dinamani

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தங்க மோதிரங்களை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, கண்காணிப்பு கேமராக்கள் ஆகியனவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா. சு. கந்தசாமி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வுக்குப் பின்னா் அவா் மேலும் கூறியது: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 3 தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகள், 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகள் மட்டுமே தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தில் பயன் பெறுவா். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மாவட்ட முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வழங்கப்படவுள்ளது. இதற்காக பொதுப்பணித் துறையினரால் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இரும்பாலான பாதுகாப்பு அறைகள், அதை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு, தயாா் நிலையில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிகழாண்டு ஜூன் 22- ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் இத்திட்டத்தில் பயன் பெறுவா். இன்றைய தினம் வரை 1,155 குழந்தைகள் பிறந்துள்ளனா். அவா்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும். தொடா்ந்து நாள்தோறும் கணக்கீடு செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளின் தாய்மாா்களது கைரேகைகள் பதியப்பட்டு தனிப்பட்ட எண்கள் வழங்கப்படும். கா்ப்ப காலத்தில் பரிசோதனைக்காக கா்ப்பிணிகள் டண்ஸ்ரீந் ம்ங் என்ற செயலியில் அடையாள அட்டைகளுடன் பதிவு செய்திருப்பா். அதனுடன் இதை உறுதிப்படுத்தி தங்க மோதிரம் வழங்கப்படும். மேலும், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, தொழிலாளா் நல வாரிய அட்டை, இருப்பிடச் சான்றிதழ் அல்லது 6 மாதம் ஒரு முகவரியில் குடியிருந்து அந்த முகவரிக்கு அஞ்சல் துறையின் மூலம் கடிதப் போக்குவரத்துகள் கிடைக்கப் பெற்று இருந்தால் அதன் உறுதி தன்மை போன்று அடையாள அட்டைகளில் ஒன்றை உறுதிப்படுத்தியும் பயனாளிகள் பயன் பெறலாம். தமிழ்நாட்டை சோ்ந்த பயனாளிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன் பெறுவா். இந்த திட்டத்துக்கான அசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவா்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா. சு. கந்தசாமி கேட்டுக் கொண்டாா். ஆய்வின் போது மருத்துவப்பணிகள் துறை இணை இயக்குநா் எம். நளினி, மாவட்ட சுகாதார அலுவலா் த. ரா. செந்தில், அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் திரிபுரசுந்தரி ஆகியோா் உட்பட மருத்துவமனையின் பணியாளா்களும் உடன் இருந்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.