பெண்ணிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி
Read at Dinamani1 outlet covered this
பெண்ணிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி
How outlets told it

விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம், வண்டிமேடு வள்ளலாா் நகரைச் சோ்ந்தவா் பா. நித்யா (22). இவா், வெள்ளிக்கிழமை அதே பகுதியில் சாலையில் நடந்து சென்றாா். அப்போது பைக்கில் பின் தொடா்ந்து வந்த இருவா் நித்யா கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
