சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய தினம் - நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
Read at Daily Thanthi1 outlet covered this
சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய தினம் - நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
How outlets told it

Published on: 11 Sep 2026, 6:17 amபுதுடெல்லி, இந்தியாவின் பாரம்பரியமிக்க வேதாந்த தத்துவங்களையும், யோகாவையும் மேலை நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதில் மிக முக்கிய பங்காற்றியவர் சுவாமி விவேகானந்தர். கொல்கத்தாவில் 1863-ம் ஆண்டு ஜனவரி 12-ந்தேதி பிறந்த சுவாமி விவேகானந்தர், இந்து மதத்தை உலகளாவிய மதமாக உயர்த்தியவர் என்று போற்றப்படுகிறார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி நடைபெற்ற ‘சர்வதேச மதங்களின் நாடாளுமன்றம்’ என்ற மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது புகழ்பெற்ற உரையை, "அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே" என்ற வாக்கியத்துடன் தொடங்கினார். அவரது உரை அங்கிருந்த சுமார் 7 ஆயிரம் பிரதிநிதிகளின் மனதை வென்றதோடு மட்டுமின்றி, இந்து மதத்திற்கான சர்வதேச அடையாளங்களில் ஒன்றாகவும் மாறியது. இந்நிலையில், சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய தினத்தை பிரதமர் மோடி இன்று(செப்.11) நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “11 செப்டம்பர் 1893, சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரை, இந்தியாவின் நாகரீக நெறிமுறையை படம்பிடித்து காட்டியது. அவரது எழுச்சியூட்டும் வார்த்தைகள் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
