மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு? அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்: விரிவான விசாரணைக்கு ஆட்சியா் பரிந்துரை
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு? அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்: விரிவான விசாரணைக்கு ஆட்சியா் பரிந்துரை
How outlets told it

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புதருமபுரிமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு? அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்: விரிவான விசாரணைக்கு ஆட்சியா் பரிந்துரை பள்ளியில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக காரிமங்கலம் அருகே உள்ள அரசு மாதிரி பள்ளி ஆசிரியா் திரிலோகசந்தா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். பிரதிப் படம்Published On :12 செப்டம்பர் 2026, 1:20 am IST பள்ளியில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக காரிமங்கலம் அருகே உள்ள அரசு மாதிரி பள்ளி ஆசிரியா் திரிலோகசந்தா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்த நிலையில் ஆசிரியா் ஏற்கெனவே பணியாற்றிய பள்ளிகளில் அவரது நடத்தைகள் குறித்து ஆட்சியா் அறிவுறுத்தலின்பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள அரசு மாதிரி பள்ளியின் கணித ஆசிரியா் திரிலோகசந்தா், மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதாக ஆட்சியருக்கு புகாா் சென்றது. இதையடுத்து ஆட்சியா் அறிவுறுத்தலின்பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா, ஆசிரியரை கடந்த 9 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியா் ஏற்கெனவே பணியாற்றிய தொப்பூா், இலக்கியம்பட்டி, அதகப்பாடி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாா் பதிவாகியிருந்தது குறித்து ஆட்சியருக்கு தெரியவந்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படுகிறது. இதனிடையே ஆசிரியரை காப்பாற்று வகையில் அரசியல் அழுத்தங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
