Sports · 1 outlet covered this

இறுதிப்போட்டியில் எந்த அணியுடன் மோதினாலும் கவலையில்லை: தீப்தி சர்மா

How outlets told it

Dinamani652d ago

இறுதிப்போட்டியில் எந்த அணியுடன் மோதினாலும் கவலையில்லை: தீப்தி சர்மா

Read at Dinamani
இறுதிப்போட்டியில் எந்த அணியுடன் மோதினாலும் கவலையில்லை: தீப்தி சர்மா
Photo: Dinamani

இறுதிப்போட்டியில் எந்த அணியுடன் மோதினாலும் கவலையில்லை: தீப்தி சர்மாஎந்த ஒரு அணியையும் லேசாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். தீப்தி சர்மா - படம் | பிசிசிஐPublished On :11 செப்டம்பர் 2026, 4:33 pm ISTஎந்த ஒரு அணியையும் லேசாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நேற்று (செப்டம்பர் 10) நடைபெற்றது. அதில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், இறுதிப்போட்டியில் எந்த அணியுடன் மோதினாலும் கவலையில்லை எனவும், எந்தவொரு அணியையும் லேசாக எடுத்துக் கொள்ள மாட்டோம் எனவும் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி யாருடன் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டுமென்பது இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் முடிவைப் பொருத்தே அமையும். எந்தவொரு அணியையும் இந்திய அணி லேசாக எடுத்துக் கொள்ளாது. இறுதிப்போட்டியில் இலங்கை அல்லது பாகிஸ்தான் என எந்த அணியை எதிர்கொண்டாலும், ஒரு அணியாக எப்படி சிறப்பாக செயல்படலாம் என்பதைக் குறித்தே சிந்திப்போம். எப்போதெல்லாம் எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம், அணிக்காக பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை வழங்க நினைக்கிறேன். பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டு அணிக்கு உதவுவது என்னுடைய நம்பிக்கையை எப்போதும் அதிகரிக்கிறது. ஒரு ஆல்ரவுண்டராக அணிக்காக எப்போதும் சிறப்பான பங்களிப்பை வழங்க விரும்புகிறேன் என்றார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (செப்டம்பர் 11) நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் (செப்டம்பர் 13) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.SummaryIndian all-rounder Deepti Sharma has stated that they will not take any team lightly. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.