Religion and culture · 1 outlet covered this

விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்து

How outlets told it

Dinamani658h ago

விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்து

Read at Dinamani
விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்து
Photo: Dinamani

தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து முதல்வர் விஜய் கூறியிருப்பதாவது, "விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்

மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் நிலையில், மாநிலத்தில் சுமார் 36,000 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படவுள்ளது. மேலும், சென்னையில் மட்டும் 1,562 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

வருவாய்  குறைவு... செலவு  அதிகரிப்பு: திணறும் சென்னை மாநகராட்சி!CM Vijay extends wishes on the occasion of Vinayagar Chaturthi