Business · 1 outlet covered this

முள்ளில் விஷம் கொண்ட முண்டக்கண்ணி மீன்... தங்க நிறக் கோடுகளுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

How outlets told it

News18 Tamil653d ago

முள்ளில் விஷம் கொண்ட முண்டக்கண்ணி மீன்... தங்க நிறக் கோடுகளுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

Read at News18 Tamil
முள்ளில் விஷம் கொண்ட முண்டக்கண்ணி மீன்... தங்க நிறக் கோடுகளுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeமுள்ளில் விஷம் கொண்ட முண்டக்கண்ணி மீன்... தங்க நிறக் கோடுகளுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிReported by:Manojkumar BPublished by:pradeepa mLast Updated:Sep 10, 2026 5:54 PM ISTதங்க நிறக் கோடுகள் மற்றும் விஷத்தன்மை கொண்ட முள்ளுடன் காணப்படும் முண்டக்கண்ணி மீன், கடல் பகுதியில் சீசனாக கிடைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1/5கடல் மீன் வகைகளில் உடல் வெள்ளி நிறத்தில், முதுகு கருஞ்சாம்பல் நிறத்தில், உடலுக்கு சம்பந்தம் இல்லாத பெரிய கண்களை கொண்டு காணப்படுவது முண்டக்கண்ணி மீன் ஆகும். இதன் கண் பெரியதாக இருப்பதால் முண்டக்கண்ணி மீன் என மீனவர்கள் கூறுகின்றனர்.2/5மேலும், உடலின் தலை முதல் வால் வரை செம்பழுப்பு நிறத்தில் கோடுகள் இருப்பதால் தங்கப்பா மீன் என்றும், அணிலின் முதுகில் இருக்கும் கோடு போன்ற‌ இருப்பதால் அணில் மீன் என்றும் அழைக்கின்றனர்.3/5இவ்வகை மீன்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் பரவிக் காணப்படுகிறது.‌‌ ஆனால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை சீசனாக கிடைக்கிறது. சீசனாக இருக்கும் நேரத்தில் விலை குறைவாக செல்கின்றது.4/5சிறிய மீன் குஞ்சுகள், பூச்சிகள், போன்றவற்றை சாப்பிடும். பகல் நேரத்தில் தன்னை வேட்டையாடும் மீன்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள பகல் நேரத்தில் பாறைகளில் மறைந்து வாழும். இரவில் உணவிற்காக வெளிவந்து மீனவர்கள் வலையில் சிக்க கொள்ளும். தன்னை வேட்டையாடுபவர்களிடம் இருந்து பாதுகாக்க விஷத்தன்மை நிறைந்து முள்ளை பயன்படுத்தி தாக்குகிறது. இதனால் காயப்பட்ட இடத்தில் வீக்கம், உடல் அலர்ச்சி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.5/5இந்த மீன் உணவினை விட எண்ணெய் உற்பத்திக்காக ஏற்றுமதி செய்கின்றனர். எண்ணெய் பிரித்தெடுத்த பிறகு அதன் சக்கையை கோழிகள் சாப்பிடும் என்பதால் கோழி தீவனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. சீசன் நேரத்தில் கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. சீசன் இல்லாத நேரத்தில் கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.