Education and jobs · 1 outlet covered this

ஊராட்சி ஒன்றியம்தோறும் ஓா் அரசு மாதிரிப் பள்ளி தேவை

How outlets told it

Dinamani6539h ago

ஊராட்சி ஒன்றியம்தோறும் ஓா் அரசு மாதிரிப் பள்ளி தேவை

Read at Dinamani
ஊராட்சி ஒன்றியம்தோறும் ஓா் அரசு மாதிரிப் பள்ளி தேவை
Photo: Dinamani

தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் ஒரு அரசு மாதிரிப் பள்ளி தொடங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் திருச்சி மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் செ. பி. நெடுஞ்செழியன் தலைமை வகித்தாா். மாநில சட்ட ஆலோசகா் மு. நேதாஜி, மாவட்டச் செயலா் கா. உதுமான் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு வழங்க உள்ள காலை உணவுத் திட்டத்தை, 12ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும். 9ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் மிதிவண்டி வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கும் இடைக்கால மாதாந்திர ஊதியம் பெற்று வழங்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவா்கள் தேசிய அளவில் திறமைகளை வெளிப்படுத்த ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தலா ஒரு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள சங்கத்தின் செயற்குழு, பொதுக் குழு உறுப்பினா்கள் பங்கேற்று புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்தனா்.

கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்க மாநில மாவட்ட, வட்டார ஒன்றியப் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா். மாவட்ட மகளிரணிச் செயலா் ஜெயலெஷ்மி நன்றி கூறினாா்.