1 outlet covered this

கிணறு, குழாய்களில் சூடான வெந்நீர் வரும் அதிசயம்: ஆந்திர கிராமங்களில் மக்கள் அவதி

How outlets told it

Daily Thanthi992d ago

கிணறு, குழாய்களில் சூடான வெந்நீர் வரும் அதிசயம்: ஆந்திர கிராமங்களில் மக்கள் அவதி

Read at Daily Thanthi
கிணறு, குழாய்களில் சூடான வெந்நீர் வரும் அதிசயம்: ஆந்திர கிராமங்களில் மக்கள் அவதி
Photo: Daily Thanthi

Published on: 11 Sep 2026, 1:14 pmஅமராவதி, ஆந்திர மாநிலம், பத்ராத்திரி கோத்தகுடேம் மாவட்டம், மாணு குரு, பாகிடேறு கொல்ல கோட்டூர் ஆகிய 3 கிராமங்களில் தரை மீது மேகங்கள் நகருவது போல் ஆவி பறக்கிறது. கால்வாய்களில் புகை போல் தண்ணீர் பாய்கிறது. மழை மற்றும் குளிர் காலங்களில் நீராவியும், புகையும் ஒரு வெள்ளி திரைபோல காலையிலேயே கிராமங்களை மூடுகின்றன. அப்பகுதியில் உள்ள கிணறுகள், ஆழ்துளை குழாய்கள், பம்பு செட்டுக்கள், கால்வாய்கள் என எங்கு பார்த்தாலும் ஆவி பறக்க கொதிக்கும் வெந்நீர் கொட்டுகிறது. இதன் காரணமாக கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். வெந்நீரை குளிரவைத்து பின்னர் குடிநீராக பயன்படுத்துகின்றனர். இந்தப் பகுதிகளில் நிலத்திற்கு அடியில் நிலக்கரி சுரங்கம் இருப்பதால் அதிலிருந்து வெளியேறும் வெப்பம் காரணமாக இந்த வகையான நீராவி தோன்றுவதாக கூறப்படுகிறது. நேற்று மாலை அப்பகுதியில் மழை பெய்த பிறகு பெண் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள பம்புசெட்டில் வரும் வெந்நீரை பிடித்துச் சென்றார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.