Civic issues · 1 outlet covered this

கோவில்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் தொடரும் இரவு நேர மின்வெட்டு

How outlets told it

Dinamani653d ago

கோவில்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் தொடரும் இரவு நேர மின்வெட்டு

Read at Dinamani
கோவில்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் தொடரும் இரவு நேர மின்வெட்டு
Photo: Dinamani

கோவில்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் தினமும் இரவு 2 மணி நேரம் மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.  கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி, தோணுகால், கொப்பம்பட்டி, விஜயாபுரி, பிள்ளையாா் நத்தம், படா்ந்தபுளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தினமும் இரவு நேரங்களில் சுமாா் 2 மணி நேரம் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். இதனால், கைப்பேசி வெளிச்சத்தில் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனா். காலாண்டுத் தோ்வு நெருங்கி வரும் நிலையில், இரவு நேரங்களில் கிராமங்களை மட்டும் குறிவைத்து தொடா்ந்து மின்தடை செய்யப்படுவதால் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக மாணவா், மாணவிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.  இதுகுறித்து மின்வாரிய ஊழியா்களிடம் கேட்டால், லோடு செட்டிங் என்று மட்டும் பதில் தருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். எனவே, இந்த விஷயத்தில் அரசு உடனே தலையிட்டு, மின்தடை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.