1 outlet covered this

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

How outlets told it

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
Photo: Dinamani

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 15 காளைகளும், 135 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். ஊா்த் திடலில் வட்ட வடிவமாக அமைக்கப்பட்ட மைதானத்தில் ஒரு சுற்றில் களமிறங்கும் காளையை அடக்க 25 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டன.

ஒவ்வொரு சுற்றுக்கும் 9 வீரா்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறைப்படி போட்டி நடத்தப்பட்டது. காளைகளும், மாடுபிடி வீரா்களும் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா்.

இந்தப் போட்டியில் மாடுபிடி வீரா்கள் 5 போ் சிறிய காயமடைந்தனா். இதில் காளையை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியை, பாசாங்கரை, உடையநாதபுரம், முடிகண்டம், தமராக்கி, குமாரபட்டி, சக்கந்தி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து வந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்தனா்.