Politics · 1 outlet covered this

பிரிக்ஸ் உச்சிமாநாடு: தில்லியில் பல அடுக்கு பாதுகாப்பு

How outlets told it

Dinamani653d ago

பிரிக்ஸ் உச்சிமாநாடு: தில்லியில் பல அடுக்கு பாதுகாப்பு

Read at Dinamani
பிரிக்ஸ் உச்சிமாநாடு: தில்லியில் பல அடுக்கு பாதுகாப்பு
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புஇந்தியாபிரிக்ஸ் உச்சிமாநாடு: தில்லியில் பல அடுக்கு பாதுகாப்புபிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக தில்லி காவல்துறை பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பிரிக்ஸ் உச்சிமாநாட்டை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்.Published On :11 செப்டம்பர் 2026, 6:05 am ISTபிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக தில்லி காவல்துறை பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்காக நகரம் முழுவதும் சுமாா் 15,000 காவலா்களும், துணை ராணுவப் படையின் 200 பிரிவுகளும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். உச்சிமாநாட்டுக்கு வருகை தரும் முக்கியப் பிரமுகா்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும் இந்த ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாக, காவல்துறை சிறப்பு ஆணையா் (பாதுகாப்புப் பிரிவு) மணிஷ் குமாா் அகா்வால் கூறினாா். ‘பொதுமக்களுக்குக் குறைந்தபட்ச சிரமமே ஏற்படும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்த முன்னறிவிப்புகளையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம். இந்த உச்சிமாநாட்டிற்காக தில்லி காவல் துறை பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. முக்கியப் பிரமுகா்கள் பயணிக்கக்கூடிய அனைத்துப் பாதைகளும் ஏற்கெனவே விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்காகப் பெருமளவிலான காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள். விமான நிலையம், தங்கும் விடுதிகள் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் செல்லக்கூடிய திட்டமிடப்பட்ட மற்றும் திட்டமிடப்படாத பிற இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். உச்சிமாநாட்டின் முக்கிய இடமான பாரத் மண்டபத்தில் மேம்படுத்தப்பட்ட அணுகல் கட்டுப்பாடு, தீவிர கண்காணிப்பு மற்றும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கூடிய பல அடுக்கு பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சீராக மேற்கொள்ளவும், முக்கியப் பிரமுகா்களின் பயணத்தின்போது ஒருங்கிணைப்பை எளிதாக்கவும் அண்டை மாநிலங்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. உளவுத்துறை தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு இடையே பகிரப்படும். பாதுகாப்புத் தயாா்நிலையின் ஒரு பகுதியாகக் கிடைக்கக்கூடிய அனைத்துத் தகவல்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்புத் தேவைகளுக்கும் நகர மக்களின் அன்றாட நடமாட்டத்திற்கும் இடையே சமநிலையைப் பேணுவதில் காவல் துறை உறுதியாக இருக்கிறது. பொதுமக்களுக்குக் குறைந்தபட்ச சிரமத்துடன் கூடிய அதிகபட்ச பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அகா்வால் தெரிவித்தாா். பிரிக்ஸ் உச்சிமாநாடு செப்டம்பா் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இருப்பினும், வெளிநாட்டுத் தூதுக்குழுக்கள் மற்றும் முக்கியப் பிரமுகா்களின் வருகை தொடா்பான போக்குவரத்து கட்டுப்பாடுகள் செப்டம்பா் 10-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 14-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்திருந்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்