70 ஆண்டுகளில் முதல் வெற்றி..! சாம்பியன்ஸ் லீக்கில் கோமோ 1907 அபாரம்!
Read at DinamaniSports · 1 outlet covered this
70 ஆண்டுகளில் முதல் வெற்றி..! சாம்பியன்ஸ் லீக்கில் கோமோ 1907 அபாரம்!
How outlets told it

சாம்பியன்ஸ் லீக்கில் அறிமுக போட்டியிலேயே வெற்றியைப் பெற்ற இத்தாலியின் கோமோ 1907 அணி குறித்து... கோமோ 1907 அணி ரசிகர்களின் நெகிழ்ச்சியான செயல். - படம்: எக்ஸ் / கோமோ 1907 Published On :11 செப்டம்பர் 2026, 12:52 pm ISTஇத்தாலியின் கோமோ 1907 அணி சாம்பியன்ஸ் லீக்கின் அறிமுக போட்டியிலேயே அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 70 ஆண்டு சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஐரோப்பியாவின் மிகப்பெரிய போட்டிகளில் விளையாடாமல் இருந்த கோமோ அணியின் முதல் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. 119 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கு விளையாடும் வாய்ப்பில் வெற்றியைப் பதிந்துள்ளது. ஐரோப்பிய கண்டத்திலேயே மிகப்பெரிய கால்பந்து தொடரான சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நேற்று முதல் தொடங்கின. இந்தத் தொடரில் கோமோ 1907 அணி முதல்முறையாக விளையாட தேர்வாகி இருந்தது. இத்தாலியின் சீரி ஏ தொடரில் நான்காவது இடம் பிடித்ததால், கோமோ 1907 அணிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. அறிமுக போட்டியில் ஆர்பி லீப்சிக் உடன் மோதிய இந்தப் போட்டியில் 4-1 என வென்றது. இந்தப் போட்டியில் கோமோ அணி சார்பில் நீகோ பஸ் 2 அசிஸ்ட்டுகளை செய்து அசத்தினார். மார்டின் படூரினா ஒரு கோல், ஒரு அசிஸ்ட் செய்து ஆட்ட நாயகன் விருதினை வென்றார். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த நீகோ பஸ் இந்த கிளப்பில் விளையாடி கடந்த சீசனின் சிறந்த இளம் வீரர் என்ற விருதினை வாங்கினார். அடுத்த மெஸ்ஸி எனப் புகழப்படும் இவர் மீது அதிகமான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இந்த வரலாற்று வெற்றியினால் கோமோ 1907 அணியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். திடலில் அந்த அணியின் பெயரை வண்ணங்களால் அலங்கரித்தனர். இந்தக் காட்சிகள் வைரலாகி வருகின்றன.SummaryComo 1907 had never played a European match in 119 years, and they won the first one 4-1 in champions leagueபின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
