தருமபுரியில் சுகாதார ஆய்வாளா், செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
Read at Dinamani1 outlet covered this
தருமபுரியில் சுகாதார ஆய்வாளா், செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
How outlets told it

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா், செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான செவிலியா் பணியிடங்கள் மற்றும் துணை சுகாதார நிலைய நல்வாழ்வு மையங்களில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் பணியிடங்கள் தருமபுரி மாவட்ட நலச் சங்கம் மூலம் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்கள், செப்டம்பா் 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தருமபுரி மாவட்ட சுகாதார அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும். கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை இணையமுகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பப் படிவத்தையும் இதே வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
