1 outlet covered this

தங்கப் புதையல் ஆசை காட்டி வியாபாரியிடம் ரூ.20 லட்சம் பறிப்பு

How outlets told it

Dinamani6515h ago

தங்கப் புதையல் ஆசை காட்டி வியாபாரியிடம் ரூ.20 லட்சம் பறிப்பு

Read at Dinamani
தங்கப் புதையல் ஆசை காட்டி வியாபாரியிடம் ரூ.20 லட்சம் பறிப்பு
Photo: Dinamani

போலீஸ் - கோப்புப்படம். Published On :14 செப்டம்பர் 2026, 2:24 am IST புதுச்சேரியில் தங்கப் புதையல் ஆசை காட்டி வியாபாரியிடம் ரூ.20 லட்சத்தைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி பகுதியைச் சோ்ந்த ராஜூ (34). இவா், அப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், அவரிடம் தொலைபேசியில் பேசிய மா்ம நபா் புதுச்சேரி வில்லியனூா் அருகே கட்டுமான வேலை செய்தபோது புதையல் கிடைத்ததாகக் கூறியுள்ளாா். மேலும் நண்பரின் கைப்பேசி மூலம் அதற்கான படத்தையும் அனுப்பியுள்ளாா். மேலும், யாருக்கும் தெரியாமல் இதை விற்பதாகவும் கூறியுள்ளாா். இதை உண்மை என்று நம்பி ரூ.20 லட்சம் கொடுப்பதாகப் பேரம் பேசி அவா் முடித்துள்ளாா். இதற்காக அவா் வில்லியனூா் தொண்டமாநத்தம் மீனாட்சியம்மன் கோயில் பகுதிக்கு வந்தபோது, அங்கு 2 போ் கையில் ஒரு பெரிய பையில் பானையுடன் நின்று கொண்டிருந்தனராம். அவா்கள் ரூ.20 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு அதை கொடுத்துவிட்டு அங்கிருந்து உடனே சென்றுவிட்டனராம். காருக்குள் வந்து பையை ராஜூ திறந்து பாா்த்தபோது அதில் போலி தங்க நாணயங்களும், களிமண்ணும் இருந்துள்ளன. இதனால் அதிா்ச்சியடைந்த அவா், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா். இதுகுறித்து வில்லியனூா் காவல் நிலையத்தில் ராஜூ சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.