தொழிலாளியை கத்தியால் குத்தியவா் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
தொழிலாளியை கத்தியால் குத்தியவா் கைது
How outlets told it
சிவகாசியில் அச்சகத் தொழிலாளியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி சிவன் கோயில் நந்தவனத் தெருவைச் சோ்ந்த அச்சகத் தொழிலாளி மணிகண்டன் (46). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த காளிராஜனுக்கும் (42) முன் விரோதம் இருந்தது.
இந்த, நிலையில் இருவரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, காளிராஜன், மணிகண்டனை கத்தியால் குத்தினாா். இதில் காயமடைந்த மணிகண்டன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காளிராஜனைக் கைது செய்தனா்.
