தோசை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கப்படுகிறது தெரியுமா? 99% பேருக்கு பதில் தெரியாது!
Read at News18 TamilCivic issues · 1 outlet covered this
தோசை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கப்படுகிறது தெரியுமா? 99% பேருக்கு பதில் தெரியாது!
How outlets told it

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Aishwarya.snews18-tamilLast Updated:Sep 12, 2026 6:52 PM ISTதோசை பலருக்கும் வாயூற வைக்கும் ஒரு உணவு ஆகும். இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் தென்னிந்திய உணவுகளில் தோசையும் ஒன்றாகும். சிறிய சாலையோரக் கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை அனைத்து இடங்களிலும் இது பரிமாறப்படுகிறது.1/9தோசை பலருக்கும் வாயூற வைக்கும் ஒரு உணவு ஆகும். இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் தென்னிந்திய உணவுகளில் தோசையும் ஒன்றாகும். சிறிய சாலையோரக் கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை அனைத்து இடங்களிலும் இது பரிமாறப்படுகிறது. தெருக்களில் பிச்சை எடுக்கும் யாசகர்கள் முதல் சொகுசு விமானங்களில் பயணிக்கும் பணக்காரர்கள் வரை அனைவருக்கும் தோசை மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்றாகும்!2/9தோசையில் பல வகைகள் உண்டு. பேப்பர் தோசை, நீர் தோசை, கல் தோசை, கறி தோசை, மசாலா தோசை, ராகி தோசை, ரவா தோசை எனப் பல வகையான தோசைகள் உள்ளன3/9மசாலா தோசை, பேப்பர் தோசை, ரவா தோசை, நெய் ரோஸ்ட் தோசை ஆகியவை மிகவும் பிரபலமானவை. மசாலா தோசையில் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் மசாலாப் பொருட்களின் கலவை நிரப்பப்பட்டு பரிமாறப்படுகிறது. இது உலகம் முழுவதும் பிரபலமானது.4/9தோசையுடன் சேர்த்து சாப்பிட பலவிதமான சட்னிகள், குழம்புகள் உள்ளன. நட்ஸ் சட்னி, வேர்க்கடலை சட்னி, புதினா சட்னி, வெங்காய சட்னி உட்பட பல வகையான சட்னிகள் உள்ளன. இவற்றுடன் சாம்பார், சிக்கன் குழம்பு, மீன், சாம்பார், வெண்ணெய், நெய், வெல்லம், சர்க்கரை போன்றவற்றைச் சேர்த்து சாப்பிட்டாலும், தோசையின் சுவை அபாரமாக இருக்கும்.5/9இப்போது உங்களுக்குள் “ஆங்கிலத்தில் தோசையை என்னவென்று அழைப்பார்கள்?” என்ற கேள்வி எழலாம். பதில் எளிமையானது. ஆங்கிலத்திலும் தோசை ‘dosa’ என்றே அழைக்கப்படுகிறது. அதற்குத் தனியான ஆங்கிலப் பெயர் இல்லை.6/9ஆங்கில அகராதிகள் இதை “மெல்லிய உப்புப் பான்கேக்”(thin salted pancake) அல்லது “தென்னிந்திய க்ரேப்”(South Indian crepes) என்று விவரிக்கின்றன. இது புளிக்கவைக்கப்பட்ட அரிசி மற்றும் உளுந்து மாவில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு மெல்லிய, மொறுமொறுப்பான தட்டையான ரொட்டியாகும். இது பொதுவாக சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறப்படுகிறது.7/9தோசை என்ற சொல் தென்னிந்திய மொழிகளிலிருந்து உருவானது. இது கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இது தென்னிந்தியாவில் பல நூற்றாண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வரும் ஒரு தொன்மையான உணவாகும்.8/9மேற்கத்திய நாடுகளில் கிடைக்கும் பான்கேக்குகள் பொதுவாக இனிப்பாகவும் பஞ்சு போலவும் இருக்கும். ஆனால் தோசை மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும். புளிக்கவைக்கும் செயல்முறையின் காரணமாக இது எளிதில் செரிமானம் ஆவதோடு, சத்து நிறைந்ததாகவும் உள்ளது.9/9இன்று, தோசை இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள உணவகங்களிலும் கிடைக்கிறது. உலகிற்கு இந்திய உணவு வகைகளை அறிமுகப்படுத்துவதில் இது ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது. இதனால், தோசை அதன் அசல் பெயரைத் தக்கவைத்துக்கொண்டு உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது வெறும் உணவு மட்டுமல்ல, தென்னிந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சின்னமும் ஆகும்.
