யானை இல்லாத பெரியகோயில்... 2013க்குப் பிறகு நடந்தது என்ன?
Read at News18 TamilCrime and courts · 1 outlet covered this
யானை இல்லாத பெரியகோயில்... 2013க்குப் பிறகு நடந்தது என்ன?
How outlets told it

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubeReported by:Anandh RPublished by:pradeepa mLast Updated:Sep 14, 2026 11:10 AM ISTதஞ்சாவூர் பெரிய கோவிலில் 13 ஆண்டுகளுக்கு மேலாக யானை இல்லாத நிலை பக்தர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி வந்தது. தற்போது சென்னை உயர்நீதிமன்றம் புதிய யானைகளைப் பெறுவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது, இது பக்தர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.1/6தஞ்சாவூர் பெரிய கோவில் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதன் வியக்கத்தக்க கட்டிடக்கலையும் கம்பீரமான பெருவுடையார் சன்னதியும்தான். ஆனால் 90-கள் மற்றும் 2000-களின் தொடக்கத்தில் கோவிலுக்குச் சென்று வந்தவர்களின் நினைவுகளில் அங்கிருந்த 'வெள்ளையம்மாள்' என்ற யானைக்கும் என்றும் தனி இடம் உண்டு.2/6பிரபல நடிகர் சிவாஜி கணேசனால் 1960-ல் வழங்கப்பட்டு பின்னர் 1985 முதல் பெரிய கோவிலில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த யானை கடந்த 2013-ஆம் ஆண்டு தனது 63-வது வயதில் வயது முதிர்வு மற்றும் மூட்டு வலியால் உயிரிழந்தது. அதுமுதல் இன்றுவரை சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக பெரிய கோவிலில் புதிய யானை ஏதும் இல்லாமல் அந்த இடம் காலியாகவே இருப்பது பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.3/6கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் ஒரு யானையை கோவில் வளாகத்தில் பார்க்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து இந்து கடந்த திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டபோது,4/6காட்டில் இருந்து யானைகளைப் பிடித்து வந்து கோவிலில் வளர்ப்பதற்கு சட்டப்படி சாத்தியமில்லை என்றும் தகுந்த நன்கொடையாளர்கள் யாரேனும் சட்டப்பூர்வமாக யானையை தானமாக வழங்க முன்வந்தால் அதை ஏற்றுப் பராமரிக்க கோவில் நிர்வாகம் தயாராக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.5/6யானையை தானமாகப் பெறுவதிலும் அதன் வம்சாவளி சான்றிதழ் வனத்துறை அனுமதி மற்றும் உயிரியல் பாதுகாப்பு விதிமுறைகள் எனப் பல சிக்கல்கள் இருப்பதால் புதிய யானையைக் கொண்டு வருவதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருகிறது. அதேவேளையில் கோவில் யானைகளின் நலன் பராமரிப்பு யானைக்கு தேவையான போதிய இடவசதி மருத்துவப் பராமரிப்பு மற்றும் நடைபயிற்சி, உணவளித்தலை உறுதி செய்வது மிக அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.6/6இந்த சூழலில் கோவில்கள் புதிய யானைகளைப் பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளை சென்னை உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் உரிய வனத்துறை அனுமதிகளுடனும் சரியான பராமரிப்பு வசதிகளுடனும் மட்டுமே புதிய யானையை கொண்டு வர முடியும் என்பதால் தஞ்சை பெரிய கோவிலில் மீண்டும் யானையின் கம்பீர பிளிறல் ஒலி கேட்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
