பரந்தூர் அருகே சிப்காட் - புதிய அரசாணை வெளியீடு..!
Read at Polimer NewsPolitics · 1 outlet covered this
பரந்தூர் அருகே சிப்காட் - புதிய அரசாணை வெளியீடு..!
How outlets told it

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் 442 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் அரசு மற்றும் தனியார் நிலங்கள் என 422 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டது. இந்த நிலையில், சிப்காட்டை விரிவாக்கம் செய்ய கூடுதலாக 20 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மதுரமங்கலத்தில் அமைய உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்னணுப் பொருள்கள் உற்பத்திப் பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும், அதன்மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
