“மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அப்டேட்
Read at Daily ThanthiCinema and entertainment · 1 outlet covered this
“மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அப்டேட்
How outlets told it

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வரும் 14ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மூக்குத்தி அம்மன் 2
இந்நிலையில், ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
‘மூக்குத்தி அம்மன்’ படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் முன்னணி ஓடிடி தளங்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை, பிரமாண்டமாக தயாராகி வரும் இப்படத்தை தியேட்டர்களில் ரசிகர்களிடம் கொண்டு செல்ல படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் தியேட்டர் வெளியீட்டை நடிகை நயன்தாரா ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாக கூறப்படுகிறது. பிரமாண்டம், உணர்வுபூர்வமான அம்சங்கள் இடம்பெற்றுள்ள இப்படம் தனது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மற்றும் உற்சாகமான மைல்கல்லாக இருக்கும் என்று நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.
நகைச்சுவை, பிரமாண்டம், பேண்டசி போன்ற அம்சங்களின் கலவையாக இப்படம் ரசிகர்களை வலுவாக சென்றடையும் என்று படத்தில் டைரக்டர் சுந்தர் சி கருதுவதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரிலீஸ் எப்போது?
அதேவேளை, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையை மையப்படுத்தி வரும் நவம்பர் மாதம் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளிம்ப்ஸ் வீடியோ அப்டேட்
சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வரும் 14ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Witness the divine power awaken Presenting the #RiseOfMahasakthi from Sep 14th, 10 AM
A @sundarcoffl Mega Divine Entertainer#MookuthiAmman2 #Mahasakthi@IshariKGanesh @VelsFilmIntl #Nayanthara @kushmithaganesh #VigneshShivan @hiphoptamizha @gopiamar @FennyOliver… pic.twitter.com/4SSaikxL3A
— Vels Film International (@VelsFilmIntl) September 12, 2026
