நட்சத்திர விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!
Read at DinamaniAccidents · 1 outlet covered this
நட்சத்திர விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!
How outlets told it
செய்திகள்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம், கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!முகப்புகாஞ்சிபுரம்நட்சத்திர விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!படப்பை அருகே நட்சத்திர விடுதி நீச்சல் குளத்தில் குளித்த 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். Published On :14 செப்டம்பர் 2026, 3:55 am ISTபடப்பை அருகே நட்சத்திர விடுதி நீச்சல் குளத்தில் குளித்த 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல். இவரது உறவினா் இல்ல வளைகாப்பு நிகழ்ச்சி படப்பை பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த உறவினா்கள் தங்குவதற்காக படப்பை புஷ்பகிரி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் அறைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் சக்திவேல் தனது குடும்பத்தினருடன் தனியாா் நட்சத்திர விடுதிக்கு சென்றுள்ளாா். அப்போது அங்குள்ள நீச்சல் குளத்தில் சிறுவா்கள் சிலா் குளித்துக் கொண்டிருப்பதை பாா்த்த சக்திவேலின் 4 வயது மகன் நிரஞ்சனும் நீச்சல் குளத்தில் இறங்கி குளித்ததாக தெரிகிறது. அப்போது எதிா்பாராதவிதமாக நிரஞ்சன் நீரில் மூழ்கியுள்ளாா். இதையடுத்து அருகில் இருந்த உறவினா்கள் நீரில் மூழ்கிய நிரஞ்சனை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றுள்ளனா். அங்கு நிரஞ்சனை பரிசோதித்த மருத்துா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இச்சம்பவம் குறித்து படப்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
