iPhone 18 : புது ஐபோன் 18 வாங்கப் போறீங்களா? எந்த நாட்டில் விலை குறைவு தெரியுமா?
Read at News18 TamilScience and tech · 1 outlet covered this
iPhone 18 : புது ஐபோன் 18 வாங்கப் போறீங்களா? எந்த நாட்டில் விலை குறைவு தெரியுமா?
How outlets told it

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:MusthakLast Updated:Sep 10, 2026 4:21 PM ISTஜப்பானில் iPhone 18 Pro மாடலின் விலை JPY 219,800 (சுமார் ரூ. 1.37 லட்சம்) ஆகும். சீனாவில் இதன் ஆரம்ப விலை CNY 9,999 (சுமார் ரூ. 1.42 லட்சம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.1/7ஆப்பிள் நிறுவனம் தனது அதிநவீன iPhone 18 Pro, iPhone 18 Pro Max மற்றும் தனது முதல் Folding Type ஸ்மார்ட்போனான iPhone Duo ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 12 முதல் இதற்கான முன்பதிவு தொடங்கவுள்ள நிலையில், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இதன் விற்பனை விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.2/7இந்தியாவில் வரிகள் மற்றும் இறக்குமதி கட்டணங்கள் காரணமாக ஐபோன்களின் விலை வழக்கம்போலவே உயர்ந்துள்ளது. iPhone 18 Pro (256GB): ரூ. 1,64,900 - iPhone 18 Pro Max (256GB): ரூ. 1,79,900 - iPhone Duo (ஆப்பிளின் முதல் ஃபோல்டபிள் போன்): ரூ. 2,99,900. இதன் 1TB மற்றும் 2TB வரையிலான டாப்-எண்ட் மாடல்களின் விலை ரூ. 2,39,900 முதல் ரூ. 3,29,900 வரை விற்பனையாகிறது.3/7சர்வதேசச் சந்தைகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவில் (US) புதிய ஐபோன்களின் விலை மிகக் குறைவாக உள்ளது. iPhone 18 Pro மாடலின் தொடக்க விலை 1,199 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.14 லட்சம்). இந்தியாவில் விற்கப்படும் விலையை விட இது சுமார் ரூ. 50,000 வரை குறைவு. iPhone 18 Pro Max 1,299 டாலர் (சுமார் ரூ. 1.24 லட்சம்) மற்றும் iPhone Duo 1,999 டாலர் (சுமார் ரூ. 1.90 லட்சம்) என விற்பனையாகிறது.4/7துபாயில் iPhone 18 Pro தோராயமாக AED 5,099 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.32 லட்சம்) என்ற விலையில் கிடைக்கிறது. இந்தியாவை விட இங்கு ரூ. 32,000 வரை குறைவாகும்.5/7ஜப்பானில் iPhone 18 Pro மாடலின் விலை JPY 219,800 (சுமார் ரூ. 1.37 லட்சம்) ஆகும். சீனாவில் இதன் ஆரம்ப விலை CNY 9,999 (சுமார் ரூ. 1.42 லட்சம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.6/7இங்கிலாந்து (£1,199 / சுமார் ரூ. 1.54 லட்சம்) மற்றும் ஜெர்மனி (€1,449 / சுமார் ரூ. 1.61 லட்சம்) ஆகிய நாடுகளில் உள்ளூர் வரிகள் காரணமாக இந்தியாவின் விலைக்கு நிகராகவே அதிக விலையில் விற்கப்படுகிறது.7/7ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், புதிய ஐபோன் மாடல்களை வாங்குவதற்கு அமெரிக்கா, கனடா மற்றும் துபாய் ஆகிய நாடுகளே மிகவும் மலிவான இடங்களாக உள்ளன.
