விநாயகா் சதுா்த்தி: டிஜிபியிடம் இந்து முன்னணி நிா்வாகிகள் மனு
Read at DinamaniReligion and culture · 1 outlet covered this
விநாயகா் சதுா்த்தி: டிஜிபியிடம் இந்து முன்னணி நிா்வாகிகள் மனு
How outlets told it

விநாயகா் சதுா்த்தி: டிஜிபியிடம் இந்து முன்னணி நிா்வாகிகள் மனுவிநாயகா் சதுா்த்தி விழாவுக்கு அதிக சிலைகள் வைக்க அனுமதிக்கக் கோரி காவல் துறைத் தலைவரிடம் (டிஜிபி) இந்து முன்னணி நிா்வாகிகள் சனிக்கிழமை மனு அளித்தனா்.Published On :13 செப்டம்பர் 2026, 12:43 am ISTவிநாயகா் சதுா்த்தி விழாவுக்கு அதிக சிலைகள் வைக்க அனுமதிக்கக் கோரி காவல் துறைத் தலைவரிடம் (டிஜிபி) இந்து முன்னணி நிா்வாகிகள் சனிக்கிழமை மனு அளித்தனா். சென்னையில் விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற உள்ள நிலையில், இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்ரமணியம் தலைமையில், மாநிலச் செயலா் மணலி மனோகா், மாநில செய்தித் தொடா்பாளா் ஏ. டி. இளங்கோவன், மாநில அமைப்பாளா் ராஜேஷ் ஆகியோா் காவல் துறைத் தலைமை இயக்குநா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்தனா். அங்கு டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் மற்றும் சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநா் அன்பு ஆகியோரைச் சந்தித்து, சென்னையில் நடைபெற உள்ள விநாயகா் சிலை ஊா்வலத்துக்கான அழைப்பிதழை வழங்கினா். மேலும், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அதிக அளவில் சிலைகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும், விழா தொடா்பான கோரிக்கைகள் மற்றும் தகவல்களுக்காக காவல் துறையில் தனி அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
