1 outlet covered this

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க நிதியை ஒதுக்குங்கள்; அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

How outlets told it

Dinamalar652d ago

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க நிதியை ஒதுக்குங்கள்; அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

Read at Dinamalar
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க நிதியை ஒதுக்குங்கள்; அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
Photo: Dinamalar

/செய்திகள்/தமிழகம்/ விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க நிதியை ஒதுக்குங்கள்; அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்UPDATED : செப் 12, 2026 02:29 PM ADDED : செப் 12, 2026 11:42 AM UPDATED : செப் 12, 2026 02:29 PM ADDED : செப் 12, 2026 11:42 AM அ நிறம் | அளவுசென்னை: விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க, தவெக அரசு ரூ.14.98 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கி, தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையின் 2 மற்றும் 3ம் மண்டல பாசன வாய்க்கால்களைத் தூர்வாருவதற்காக 1,801.27 கி. மீ. நீளமுள்ள கால்வாய்களில் ரூ.14.98 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் மானியக் கோரிக்கையில் அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று விவசாயிகள், வாய்க்கால் பாசன அலுவலகத்தில், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் இந்தப் பாசனத்தை நம்பியுள்ளன. வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருந்தால், வறட்சி மற்றும் குறைந்த மழை சூழலில் கடைமடை வரை பாசனத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் நேரடியாகப் பாதிக்கப்படும். நிதி ஒதுக்கீட்டிற்குப் பிறகு, பணிகளைத் தொடங்கி முடிக்க குறைந்தது ஒரு மாதம் தேவைப்படும் என்பதால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க, தவெக அரசு ரூ.14.98 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கி, தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார். சிறப்பு வீடியோ!உடனே நிதி ஒதுக்கி வேலையை துவங்குங்க; தவெக அரசுக்கு அண்ணாமலை விடுத்த கோரிக்கை குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு