Business · 1 outlet covered this

தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு? (செப். 14)

How outlets told it

Dinamani656h ago

தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு? (செப். 14)

Read at Dinamani
தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு? (செப். 14)
Photo: Dinamani

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக உலக நாடுகள் அதிகளவில் தங்கத்தில் முதலீடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் தங்கம் விலை கடந்த வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 113,360-க்கு விற்பனையானது.

இன்றைய தங்கம் நிலவரம்

இந்த நிலையில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (செப். 14) கிராமுக்கு ரூ. 45 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,125-க்கும் சவரனுக்கு ரூ. 360 குறைந்து ஒரு சவரன் ரூ. 113,000-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி நிலவரம்

வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 250, கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today's Gold and silver price rate in Chennai, TamilNadu