1 outlet covered this

பிரதமர் மோடி அளித்த விருந்தில் சீன அதிபர் பங்கேற்காதது ஏன்?

How outlets told it

Dinamalar6517h ago

பிரதமர் மோடி அளித்த விருந்தில் சீன அதிபர் பங்கேற்காதது ஏன்?

Read at Dinamalar
பிரதமர் மோடி அளித்த விருந்தில் சீன அதிபர் பங்கேற்காதது ஏன்?
Photo: Dinamalar

ADDED : செப் 13, 2026 10:07 PM ADDED : செப் 13, 2026 10:07 PM அ நிறம் | அளவு- சிறப்பு நிருபர் -'பிரிக்ஸ்' அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க நேற்று முன்தினம், டில்லிக்கு வந்த சீன அதிபர் ஷீ ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சு நடத்தினார். ஆனால், பிரதமர் மோடி அளித்த இரவு விருந்தில் பங்கேற்கவில்லை. இது பல யூகங்களையும், கேள்விகளையும் உருவாக்கியது. பிரிக்ஸ் அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தாண்டு நம் நாட்டுக்கு கிடைத்துள்ளது. இதன்படி, டில்லியில் இரண்டு நாள் உச்சி மாநாடு நேற்று ( செப்.,12) துவங்கி இன்று முடிவடைந்தது. முக்கியத்துவம் இதற்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டும், அமைப்பை உருவாக்கிய நாடுகளில் ஒன்றான சீனாவின் அதிபரான ஷீ ஜின்பிங், மாநாட்டில் பங்கேற்பாரா என்பது கடைசி வரை உறுதி செய்யப்படாமல் இருந்தது. வருவார், மாட்டார் என்று மாறிமாறி கூறப்பட்ட நிலையில், மாநாடு துவங்குவதற்கு ஒரு நாள் முன்புதான், ஜின்பிங்கின் பயணம் உறுதி செய்யப்பட்டது. இரு நாட்டுக்கும் இடையே எல்லைப் பிரச்னை தீவிரமாக உள்ள நிலையில், சர்வதேச அரசியல் குழப்பங்கள் தீவிரமாக உள்ள நிலையில், ஜின்பிங்கின் வருகை முக்கியத்துவம் பெற்றது. மாநாட்டுக்கு வந்த அவர் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்டோருடன் சகஜமாக பேசினார். மாநாட்டிலும் தன் நாட்டின் நிலைப்பாட்டை அவர் உறுதியாக தெரிவித்தார். சர்வதேச அளவில், 'குளோபல் சவுத்' எனப்படும் உலகின் தென்பகுதியில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளின் குரலுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்தை ஆமோதித்து அவர் பேசினார். மாநாட்டுக்கு வந்தாலும், இரு தரப்பு பேச்சு நடக்குமா என்பது கடைசி வரை உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று மாலையில், இரு தலைவர்களும் சந்தித்து, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். இந்த அனைத்தும், மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்தக்கட்ட முன்னேற்றத்துக்கான வாய்ப்பாகவும் இந்த சந்திப்புகள் நடந்தன. இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நேற்று இரவு விருந்தளித்தார். ஆனால், ஜின்பிங் இதில் பங்கேற்கவில்லை. அவர் விருந்தில் பங்கேற்காததற்கு மத்திய அரசு அல்லது சீன அரசு அதிகாரப்பூர்வமாக எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானும் விருந்தில் பங்கேற்கவில்லை. அவர் மாநாடு முடிந்ததும் புறப்படுவது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அதனால் இது சர்ச்சையாகவில்லை. ஆனால், ஜின்பிங் இரவு விருந்தில் ஏன் பங்கேற்கவில்லை என்பது தொடர்பாக பல யூகங்களும், கேள்விகளும் எழுந்தன. சோர்வு நீண்ட துார பயணம் மற்றும் நாடுகளுக்கு இடையேயான நேர வித்தியாசம் ஆகியவற்றால், ஜின்பிங் சற்று சோர்வாக இருந்துள்ளார். அதனாலேயே அவர் இரவு விருந்தில் பங்கேற்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. சீன தரப்பிலும், 'ஜின்பிங்கின் இந்தப் பயணம், இரு தரப்பு உறவில் புதிய பாதையை உருவாக்கியுள்ளது. இந்தியாவுடன் நெருக்கமான நட்பை அவர் விரும்புகிறார். தனிப்பட்ட காரணங்களாலேயே இரவு விருந்தில் பங்கேற்க முடியவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது. சீர்திருத்தத்துக்கு ஐ. நா., ஆதரவு 'ஐ. நா., பாதுகாப்பு கவுன்சிலில் விரிவான சீர்திருத்தம் தேவை' என, பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு ஐ. நா., பொதுச் செயலர் அலுவலகம் ஆதரவு தெரிவித்துள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில், ஐ. நா., பொதுச் செயலரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் பேசியதாவது:ஐக்கிய நாடுகளின் அமைதியும், பாதுகாப்பும் சார்ந்த கட்டமைப்பின் மையமாக பாதுகாப்பு கவுன்சில் உள்ளது. தற்போது ஐந்து நிரந்தர உறுப்பினர்களை கொண்ட அதன் அமைப்பு, 21-ம் நுாற்றாண்டின் உண்மையான பிரதிநிதித்துவமாக இல்லை. பாதுகாப்பு கவுன்சில் மட்டுமல்லாமல், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளும், தற்போதைய சூழலில் உள்ள உலக யதார்த்தங்களை பிரதிபலிக்க வேண்டும். அனைத்து நாடுகளின் குரல்கள் ஒலிக்கும், 'கூட்டாண்மை தளம்' உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சீன - ரஷ்ய தலைவர்களுக்குநடுவே பிரதமர் மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் மற்றும் நிறைவு நாளான இன்று, அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இணைந்து குழு புகைப்படம் எடுத்தனர். அப்போது, ரஷ்யா மற்றும் சீன அதிபர்களுக்கு நடுவில் பிரதமர் மோடி நின்றார். மத்திய அமைச்சர்களும், மாநில முதல்வர்களும் டில்லி பாரத் மண்டபத்தில், நேற்று முன்தினம் உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்தளித்தார். இதில், பல மத்திய அமைச்சர்களும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களும் பங்கேற்றனர். இவர்கள் விழா அரங்குக்கு சிறப்பு பஸ்சில் ஒன்றாக பயணித்தனர். மத்திய அமைச்சர்கள் சிவ்ராஜ் சிங் சவுகான், கிரண் ரிஜிஜு, நிர்மலா சீதாராமன், பீயூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோரும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மஹா., முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோரும் பஸ்சில் பயணித்தனர்.11 நாடுகள் 4 கண்டங்கள் பிரிக்ஸ் அமைப்பில் தற்போது, பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என, 11 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் இணைந்து, உலகின் மக்கள் தொகையில், 49.5 சதவீதத்தையும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 40 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில், 26 சதவீதத்தையும் கொண்டுள்ளன. இந்த அமைப்பின் புவியியல் பரப்பளவு தற்போது ஆசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நான்கு கண்டங்களில் விரிவடைந்துள்ளது.