12 ஆண்டுக்குப் பின்... இடைத்தேர்தலில் இடதுசாரிகள் - தவெகவுக்கு பாதிப்பா? அரசியல் கணக்கு சொல்வது என்ன?
Read at News18 TamilPolitics · 1 outlet covered this
12 ஆண்டுக்குப் பின்... இடைத்தேர்தலில் இடதுசாரிகள் - தவெகவுக்கு பாதிப்பா? அரசியல் கணக்கு சொல்வது என்ன?
How outlets told it

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Malaiarasu Mnews18-tamilLast Updated:Sep 14, 2026 7:04 AM ISTBy-election | மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பமாக ஆளும் தவெக மீது புகார் பட்டியலை வாசித்து, தனித்துப் போட்டி என இடதுசாரிகள் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1/72026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள், பெரும்பான்மையின்றி தவித்த தவெகவுக்கு ஆதரவு தந்து ஆட்சி அமைக்க உதவின. இடதுசாரிகள் மட்டும் அமைச்சரவையில் பங்கு பெறாமல், ஆட்சிக்கு மட்டும் ஆதரவு தந்தனர்.2/7எனினும் மின்வெட்டு, பயிர்க்கடன் தள்ளுபடி, அதிமுக எம்எல்ஏக்கள் குதிரை பேர குற்றச்சாட்டு விவகாரங்களில் குரல் கொடுத்தனர். இந்தச் சூழலில் மாணவர் அமைப்பின் போராட்டங்களைத் தடுக்க சுற்றறிக்கை அனுப்பியது, குஜிலியம்பாறை வட்டத்தில் இடதுசாரிகளைக் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டது, புதிய தலைமைச் செயலக இடத் தேர்வு விவகாரங்களில் அரசுக்கெதிராக போராட்டத்திலும் குதித்தனர்.3/7தமிழகத்தை இடதுபுறமாக அதாவது இடதுசாரிகள் பக்கமாக திருப்புவது எனும் முழக்கத்தின் வேகம் அதிகரித்த நிலையில்தான் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனால் இடதுசாரிகள் யார் பக்கம் எனக் கூர்ந்து கவனிக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.4/7மேலும் இடைத்தேர்தல் இயற்கையாக வந்தது அல்ல, இது திணிக்கப்பட்ட தேர்தல் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். இடதுசாரிகள் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்றும் வேட்பாளர் அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கூறியுள்ளார்.5/7இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடவுள்ளதால் தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இது யாருக்குச் சாதகம் எனக் கேள்வி எழுந்துள்ள நிலையில், தவெக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.6/7இடதுசாரிகளின் அதிரடி முடிவால் தேர்தலில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜென் ராம் விளக்கினார். அவர் கூறுகையில் "தவெகவுக்கு எதிரான வாக்குகள் 4 முனைகளில் பிரிகிறது என்பதால் அது தவெகவுக்கு சாதகம் என்கிற பார்வை இருக்கிறது. ஆனால் எளிய மக்களுக்கு எதிராக இந்த ஆட்சியில் நடக்கும் அவலங்களை இடதுசாரிகள் பிரச்சாரத்தில் முன்னிறுத்துகிறார்கள். இந்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் என்ன மாதிரியான கருத்தை உருவாக்கும். அந்தக் கருத்து தவெகவுக்கு எதிரான மனநிலையை உருவாக்குமா என்பது போன்ற பல்வேறு கேள்விகள் உள்ளன. அப்படியான எதிர்ப்பு உணர்வு இந்த ஆட்சி மீது வந்திருந்தால் அது திமுக, அதிமுகவுக்கு தான் வாக்குகளாகச் செல்லும். மக்கள் அதிமுக, திமுகவுக்கு வாக்களிப்பார்களா என்பது பிரச்சாரம் உச்சமடைந்த பிறகே தெரியவரும்" என்றும் விளக்கினார்.7/7தமிழகத்தை இடதுசாரிகள் பக்கம் திருப்பும் முகமாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு இடதுசாரிகள் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.25 வயதிலேயே நரை முடி வந்துவிடுகிறதா? அப்போ இதை மட்டும் செய்தால் மீண்டும் கருமையான கூந்தலை பெறலாம்?இளம் வயதில் நரை முடிகள் தோன்றுவது என்பது ஏதேனும் நோயின் அறிகுறியாக இருக்கலாம். அல்லது வெறும் மரபியல் காரணங்களாகவும் இருக்கலாம். என்ன காரணமாக இருக்குமென கண்டறிய, இது உங்களுக்கு உதவலாம். தாக்கக் குறும்படங்கள்
