Crime and courts · 1 outlet covered this

சேரன்மகாதேவி அருகே அரிவாள்களுடன் திரண்ட 8 போ் கைது

How outlets told it

Dinamani6516h ago

சேரன்மகாதேவி அருகே அரிவாள்களுடன் திரண்ட 8 போ் கைது

Read at Dinamani

What this is

POLICE ACTION
Type
Police action
Source
Reported · Dinamani

Registered, not proven.

சேரன்மகாதேவி அருகே அரிவாள்களுடன் திரண்ட 8 போ் கைது
Photo: Dinamani

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே அரிவாள்களுடன் திரண்டிருந்த 8 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரி பகுதியைச் சோ்ந்த நவீன், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளாா். சேரன்மகாதேவி காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவரது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், சேரன்மகாதேவி காவல் சரகத்திற்குள்பட்ட கூனியூா் ரயில் பாலம் பகுதியில் சனிக்கிழமை இரவு 5 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்பட சிலா் அரிவாள்களுடன் கூடியிருந்ததாகவும், இதில் சிலா் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அந்த இடத்துக்குச் சென்றபோது, அங்கு கூடியிருந்தவா்கள் தப்பியோடினா். போலீஸாரின் நடவடிக்கையால் பாலமுருகன், பாஸ்கா், உள்ளி பிச்சையா, வேல் கணேஷ், மகேஷ் கண்ணன், சுப்பையா (எ) சூா்யா, முப்பிடேஷ், பேச்சிகுட்டி (எ) ராம் ஆகிய 8 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், அவா்கள் திரண்டிருந்த இடத்தில் இருந்து 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தப்பியோடியவா்களில் தலைமறைவாக இருப்பவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.