சுடச்சுட டீ, காபி குடிக்கும் பழக்கம் இருக்கா? புற்றுநோய் அபாயம் உண்டாம்... எச்சரிக்கும் ஆய்வு!
Read at News18 TamilLifestyle · 1 outlet covered this
சுடச்சுட டீ, காபி குடிக்கும் பழக்கம் இருக்கா? புற்றுநோய் அபாயம் உண்டாம்... எச்சரிக்கும் ஆய்வு!
How outlets told it

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeசுடச்சுட டீ, காபி குடிக்கும் பழக்கம் இருக்கா? புற்றுநோய் அபாயம் உண்டாம்... எச்சரிக்கும் ஆய்வு!Published by:Nivetha Jnews18-tamilLast Updated:Sep 10, 2026 1:58 PM ISTசுடச்சுட டீ, காபி குடித்தால், புற்றுநோய் அபாயம் உயருமென எச்சரிக்கின்றது ஒரு ஆய்வு. இது ஏன், எதனால் என்பது பற்றி முழு விவரம் இங்கே...1/7இன்றைய தேதியில் டீ, காபி போன்ற சூடான பானங்கள் பலரது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளன. குறிப்பாக காலையில் எழுந்தவுடன் சூடான டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால், அதிக சூட்டில் டீ அல்லது காபியை நீண்டகாலம் குடிப்பது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.2/7குறிப்பாக, அதிக சூடாக இருக்கும் டீ, காபி உள்ளிட்ட பானங்களை தொடர்ந்து குடிப்பதால், உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது எப்படி சாத்தியம்? ஏன் புற்றுநோய் ஆபத்து வருகிறது என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.3/765°C-க்கு மேல் இருந்தால் ஆபத்தா? ஆம், சுமார் 65°C அல்லது அதற்கு மேல் இருக்கும் மிகவும் சூடான பானங்களை தொடர்ந்து குடிப்பது உணவுக்குழாயின் உள்புறத்தில் உள்ள திசுக்களுக்கு வெப்பத்தால் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.4/7ஏன்? உணவுக்குழாய் என்பது நாம் சாப்பிடும் உணவு மற்றும் குடிக்கும் பானங்கள் வாயிலிருந்து வயிற்றைச் சென்றடைய உதவும் குழாய். அதிக வெப்பமான பானங்கள் இந்தப் பகுதியில் மீண்டும் மீண்டும் வெப்பத் தாக்கத்தை ஏற்படுத்தும்போது, செல்களில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கலாம்.5/7புற்றுநோய் ஆபத்து கண்டிப்பாக உண்டா? தொடர்ச்சியான, நீண்டகால பழக்கம் இருந்தால் மட்டுமே புற்றுநோய் ஆபத்து வருகிறது. ஒருமுறை சூடான டீ அல்லது காபி குடித்தாலே புற்றுநோய் ஏற்படும் என்று இல்லை. மட்டுமன்றி டீ அல்லது காபியில் உள்ள பொருட்கள் மட்டுமே பிரச்சனை என்று கூற முடியாது. இங்கு முக்கியமான விஷயம் பானத்தின் வெப்பநிலை. அதாவது, டீ, காபி அல்லது வேறு எந்த பானமாக இருந்தாலும், அது மிகவும் சூடாக இருக்கும் நிலையில் தொடர்ந்து அருந்துவது உணவுக்குழாயில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பை அதிகரிக்கக்கூடும்.6/7எனில் சூடான பானம் குடிக்கும்போது என்ன செய்யலாம்? டீ அல்லது காபியை தயாரித்தவுடன் உடனடியாக குடிப்பதற்குப் பதிலாக, சில நிமிடங்கள் ஆறவிட்டு, குடிக்க ஏற்ற வெப்பநிலைக்கு வந்த பிறகு அருந்துவது நல்ல பழக்கம். குறிப்பாக, குடிக்கும் போது நாக்கு அல்லது வாயில் எரிச்சல் ஏற்படும் அளவுக்கு சூடாக இருந்தால், அதை உடனடியாக குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.7/7பொறுப்புத் துறப்பு: இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும். News18Tamilnadu இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
