Politics · 1 outlet covered this

இடைத்தேர்தலில் தவெக கூட்டணி வெற்றிபெற ஒத்துழைப்பு அளிப்போம்: திருமாவளவன்

How outlets told it

Dinamani657h ago

இடைத்தேர்தலில் தவெக கூட்டணி வெற்றிபெற ஒத்துழைப்பு அளிப்போம்: திருமாவளவன்

Read at Dinamani
இடைத்தேர்தலில் தவெக கூட்டணி வெற்றிபெற ஒத்துழைப்பு அளிப்போம்: திருமாவளவன்
Photo: Dinamani

வருகிற இடைத்தேர்தலில் தவெக கூட்டணி வெற்றிபெற ஒத்துழைப்பு அளிப்போம் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது, "தவெக ஆட்சியமைப்பதற்கு மட்டுமே ஆதரவு தருவதாக இடதுசாரிகள் கூறி வந்தார்கள். அதன் அடிப்படையிலேயே, இந்த ஆட்சி தொடர்வதற்கான ஆதரவு எப்போதும் உண்டு.

ஆனால், தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் இடைத்தேர்தலில் தனித்து நிற்பதாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன. இது அவர்களுக்கான உரிமை.

தற்போது மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் விசிக இடம்பெற்றிருக்கிறோம். இவ்விரு தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெறுவதற்கு விசிக தரப்பில் ஒத்துழைப்பு நல்குவோம்.

ஆளுங்கட்சி குறித்து திமுக எம். பி. யான ஆ. ராசாவின் பேச்சு மிகுந்த அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது. இது திமுகவுக்கே எதிராகப் போய்விடும்.

முதல்வரையே ஒருமையில் பேசுவது, மற்றவரின் பிறப்பு குறித்து கேள்வி எழுப்புவது என்பதெல்லாம் பெரியார் பாசறையில் வளர்ந்தவரின் பேச்சாகத் தெரியவில்லை. இது திமுக மீதான நன்மதிப்பைச் சீர்குலைக்கும்" என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்இடைத்தோ்தலில் கூட்டணி வெற்றிக்கு விசிக ஒத்துழைக்கும்: திருமாவளவன்VCK will extend cooperation for the TVK alliance's victory in the by-election, says Thol. Thirumavalavan

இடைத்தேர்தலில் தவெக கூட்டணி வெற்றிபெற ஒத்துழைப்பு அளிப்போம்: திருமாவளவன் · Snashd