Religion and culture · 1 outlet covered this

1 மெகாவாட் மின்சாரம் எத்தனை யூனிட் தெரியுமா? நாம் பயன்படுத்தும் மின்சாரம் எப்படி கணக்கிடப்படுகிறது?

How outlets told it

News18 Tamil6544h ago

1 மெகாவாட் மின்சாரம் எத்தனை யூனிட் தெரியுமா? நாம் பயன்படுத்தும் மின்சாரம் எப்படி கணக்கிடப்படுகிறது?

Read at News18 Tamil
1 மெகாவாட் மின்சாரம் எத்தனை யூனிட் தெரியுமா? நாம் பயன்படுத்தும் மின்சாரம் எப்படி கணக்கிடப்படுகிறது?
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Aishwarya.snews18-tamilLast Updated:Sep 12, 2026 7:51 PM ISTபொதுவாக மக்கள் மின்சாரத்தை யூனிட் என்ற வடிவிலேயே பயன்படுத்துகின்றனர். அப்படியென்றால் 1 மெகாவாட் என்பது எவ்வளவு யூனிட் என்பது அனைவரின் கேள்வியாக இருக்கும். இப்போது அதற்கான பதிலை விரிவாக தெரிந்துகொள்ளலாம்.1/8மின்சாரம் என்பது மக்களின் அன்றாட தேவைகளில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. ஒருநாளில் ஒரு மணிநேரம் கரண்ட் இல்லை என்றால் கூட மக்கள் அனைவரும் ஒரு கை உடைந்ததை போன்றே உணர்கிறார்கள். காலை எழுந்தது முதல் இரவு தூங்குவது வரை கரண்ட் இன்றியமையாததாகி விட்டது.2/8கோடையில் இதன் தேவை மிக அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பமும் பெருகி வரும் மக்கள்தொகையும் மின் தேவையை மேலும் அதிகரித்து விட்டது. உற்பத்தி குறைவான நிலையில் மின் தேவை அதை விட பன்மடங்கு அதிகரித்துள்ளது.3/8மின் பற்றாக்குறை நம் நாட்டில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு தீர்வு காண பல நாடுகளும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சமீபத்தில் ஐரோப்பிய நாடான பெல்ஜியம் ‘எனெர்ஜி ஐலேண்ட்’ என்ற திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது.4/8இந்தியா அதன் மின் தேவையை பூர்த்தி செய்ய சூரிய மின்சக்தியை ஆயுதமாக கையில் எடுத்துள்ளது. அனைத்து வீடுகளிலும் சோலார் மின் தகடுகளை பொருத்த மானியம் வழங்கி ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நீடித்த கோடையின் காரணமாக மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் விதமாக 2000 மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு பல தனியார் நிறுவனங்களில் இருந்து விலைக்கு வாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.5/8இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழலாம். பொதுவாக மக்கள் மின்சாரத்தை யூனிட் என்ற வடிவிலேயே பயன்படுத்துகின்றனர். அப்படியென்றால் 1 மெகாவாட் என்பது எவ்வளவு யூனிட் என்பது அனைவரின் கேள்வியாக இருக்கும். இப்போது அதற்கான பதிலை விரிவாக தெரிந்துகொள்ளலாம்.6/8அறிவியல் முறையில் பார்க்கையில் மின்சாரம் என்பது ‘வாட்’ என்றே அளவிடப்படுகிறது. அப்படி பார்க்கையில் 1000 வாட் மின்பொருள் ஒரு மணிநேரத்தில் பயன்படுத்தும் மின்சாரம் 1 யூனிட் ஆக கணக்கிடப்படுகிறது. அதுவே, 100 வாட் மின்பொருள் 10 மணிநேரத்தில் பயன்படுத்தும் மின்சாரம் 1 யூனிட் ஆகும். 500 வாட் மின்பொருள் 2 மணிநேரம் இயங்கினால் அது பயன்படுத்தும் மின்சாரம் 1 யூனிட் ஆகும். (அதாவது 1 யூனிட் = 1,000 வாட் X 1 மணிநேரம் என்பதாகும்.)7/8இதனை இன்னும் எளிமையாக புரிந்துகொள்ள வேண்டுமெனில் உங்கள் வீட்டில் பயன்படுத்த 100 வாட் பல்பு வாங்கி வருகிறீர்கள். அதனை நீங்கள் தொடர்ச்சியாக 10 மணிநேரம் எரிய விடுகிறீர்கள் எனில் அது மொத்தமாக பயன்படுத்திய மின்சாரத்தின் அளவு அல்லது மொத்தமாக செலவழிக்கப்பட்ட மின்சாரத்தின் அளவு 1 யூனிட் ஆகும்.8/8தற்போது தமிழக அரசு 2000 மெகாவாட் மின்சாரத்தை வாங்கியுள்ளது. இதன் பொருள் 200 கோடி கிலோவாட் என்பதாகும். அதாவது 200 கோடி X 1000 வாட் ஆகும். (1000 வாட் = 1 கிலோவாட்).  2000 மெகாவாட் திறன் கொண்ட மின்பொருளை 1 மணிநேரம் தொடர்ந்து இயக்கினால் செலவாகும் மின்சாரம் 20 லட்சம் யூனிட்கள் ஆகும். அதாவது 1 மெகாவாட் திறன் கொண்ட மின்பொருளை 1 மணிநேரம் தொடர்ந்து இயக்கினால் செலவாகும் மின்சாரம் 1,000 யூனிட்கள் ஆகும்.