Cinema and entertainment · 1 outlet covered this

அஜித் கார் பந்தயத்தை ரசிக்கும் முதல்வர் விஜய் - த்ரிஷா.. வைரல் போட்டோஸ்!

How outlets told it

News18 Tamil6542h ago

அஜித் கார் பந்தயத்தை ரசிக்கும் முதல்வர் விஜய் - த்ரிஷா.. வைரல் போட்டோஸ்!

Read at News18 Tamil
அஜித் கார் பந்தயத்தை ரசிக்கும் முதல்வர் விஜய் - த்ரிஷா.. வைரல் போட்டோஸ்!
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeஅஜித் கார் பந்தயத்தை ரசிக்கும் முதல்வர் விஜய் - த்ரிஷா.. வைரல் போட்டோஸ்!Published by:Khalilullah Snews18-tamilLast Updated:Sep 12, 2026 10:35 PM ISTலண்டனில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ள கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் உடன் இணைந்து நடிகை த்ரிஷா கண்டுகளித்தார்.1/6லண்டனில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ள கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் உடன் இணைந்து நடிகை த்ரிஷா கண்டுகளித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.2/6தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லண்டனுக்கு 6 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது போன்ற நிகழ்ச்சிகள் முதலமைச்சரின் சுற்றுப் பயணத்தில் உள்ளன. முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில், உலகத் தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதற்கு கார் ரேஸ் வீரரும் நடிகருமான அஜித் நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.3/6லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டர் ரேஸ் மைதானத்தில் நடைபெறும் அஜித் பங்கேற்க கூடிய கார் ரேஸினை முதலமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார். மேலும் விஜய்யுடன் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அதிகாரிகள் மைதானத்தை தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ள கார் ரேஸ் மைதானத்தின் மாதிரிக்காக பார்வையிடுகின்றனர்.4/6இதனிடையே மைதானத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்யை அஜித் குமார் ஆரத் தழுவி வரவேற்றார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இருவரும் கட்டியணைத்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.5/6இந்நிலையில், சில்வர்ஸ்டோன் மோட்டர் ரேஸ் மைதானத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் நடிகர் அஜித்தின் கார் சீறிப்பாய்ந்தது. முன்னதாக அஜித் காரின் முன் பக்கத்தில் அமர்ந்து விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.6/6அஜித் பங்கேற்கும் இந்த கார் பந்தயத்தை காண நடிகை த்ரிஷா லண்டன் சென்றார். சில்வர்ஸ்டோன் மோட்டர் ரேஸ் மைதானத்துக்கு வந்த அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், கார் பந்தயத்தை கேலரியில் நின்றுகொண்டு தமிழக முதல்வர் விஜய் மற்றும் த்ரிஷா கண்டுகளித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.