Crime and courts · 1 outlet covered this

மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய மூவர் கைது! நவீன ரக துப்பாக்கிகள் பறிமுதல்!

How outlets told it

Dinamani652d ago

மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய மூவர் கைது! நவீன ரக துப்பாக்கிகள் பறிமுதல்!

Read at Dinamani
மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய மூவர் கைது! நவீன ரக துப்பாக்கிகள் பறிமுதல்!
Photo: Dinamani

மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய மூவர் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களிடமிருந்து ஐந்து நவீன ரகத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர். ஹெங்லெப் துணைப் பிரிவில் உள்ள முன்பி கிராமத்தில், மாநிலக் காவல்துறை மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் ஆகியவற்றின் கூட்டுப் படையினரால் இவர்கள் வெள்ளிக்கிழமை பிடிபட்டனர். ஆயுதம் வைத்திருந்த நபர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை காவல்துறை வெளியிடவில்லை. அவர்களிடமிருந்து ஒரு ஹெச்கேஜி, 3 தாக்குதல் துப்பாக்கி, ஒரு ஏ1 துப்பாக்கி, இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள், ஒரு எம்22 தாக்குதல் துப்பாக்கி, பல்வேறு ஆயுதங்களுக்கான ஏழு மேகசின்கள் (தோட்டாக்கள் நிரப்பும் பெட்டிகள்) மற்றும் 298 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவித்தது. மணிப்பூரில் இன மோதல்கள் வெடித்ததிலிருந்து பாதுகாப்புப் படையினர் அங்குத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மே 2023-ல் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த மைதேயி சமூகத்தினருக்கும் மலைப்பகுதியைச் சேர்ந்த குகி சமூகத்தினருக்கும் இடையே வெடித்த இன மோதலில் சுமார் 306 பேர் பலியாகினர். மேலும், 49 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.