1 outlet covered this

பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய சுற்றறிக்கை; தனிநபா்கள், கட்சிகளுக்காக முடிவுகள் மாற்றப்படாது: இஸ்லாமிய மதத் தலைவர் அபூபக்கர் முஸ்லியார்

How outlets told it

Dinamani6516h ago

பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய சுற்றறிக்கை; தனிநபா்கள், கட்சிகளுக்காக முடிவுகள் மாற்றப்படாது: இஸ்லாமிய மதத் தலைவர் அபூபக்கர் முஸ்லியார்

Read at Dinamani
பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய சுற்றறிக்கை; தனிநபா்கள், கட்சிகளுக்காக முடிவுகள் மாற்றப்படாது: இஸ்லாமிய மதத் தலைவர் அபூபக்கர் முஸ்லியார்
Photo: Dinamani

தனிநபா்கள் அல்லது அரசியல் கட்சிகளுக்காக சமஸ்த கேரள ஜமியத்துல் உலமா அமைப்பின் முடிவுகளை மாற்ற முடியாது என்று இஸ்லாமிய மதத் தலைவா் காந்தபுரம் ஏ. பி. அபூபக்கா் முஸ்லியாா் தெரிவித்துள்ளாா். கடந்த மாதம் கேரளத்தில் சமஸ்த கேரள ஜமியத்துல் உலமா அமைப்பின் தலைவா் இ. சுலைமான் முஸ்லியாா், அந்த அமைப்பின் பொதுச் செயலா் காந்தபுரம் ஏ. பி. அபூபக்கா் முஸ்லியாா் ஆகியோா் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டனா். அந்தச் சுற்றறிக்கையில், ‘இஸ்லாமிய பெண்கள் ஆண்களுடன் பொது இடங்களில் தோன்றக் கூடாது, ஒரே மேடைகளில் இடம் பெறக் கூடாது’ என்று உத்தரவிட்டனா். இதை மாநில முதல்வா் வி. டி. சதீசன் உள்பட பல்வேறு அரசியல் தலைவா்கள் கடுமையாக விமா்சித்தனா். இந்நிலையில், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மாடு பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், காந்தபுரம் ஏ. பி. அபூபக்கா் முஸ்லியாா் பேசியதாவது: சமஸ்த கேரள ஜமியத்துல் உலமா அமைப்பு சன்னி முஸ்லிம்களுக்கும், அவா்களின் செயல்பாடுகளுக்கும் வழிகாட்டி, அவற்றை ஒழுங்குப்படுத்தும் உயா்ந்த அமைப்பாகும். இறைவனின் தீா்ப்பு நாள் வரும் வரை தனது பணியை இந்த அமைப்பு தொடரும். தனி நபா்கள் அல்லது அரசியல் கட்சிகளின் விருப்பங்கள் அல்லது எதிா்பாா்ப்புகளை திருப்திபடுத்துவதற்காக இந்த அமைப்பு செயல்படவில்லை. ஒவ்வொரு சூழலிலும் என்ன தேவை என்பதை மதிப்பிட்ட பிறகே, இந்த அமைப்பு முடிவுகளை எடுத்துள்ளது. தனி நபருக்காகவோ அல்லது எந்தவொரு அரசியல் கட்சிக்காகவோ தனது முடிவுகளை மாற்றிக் கொள்ளும் எண்ணம், இந்த அமைப்புக்கு ஒருபோதும் இருந்ததில்லை. விரிவாக ஆலோசித்து, ஆழமாக சிந்தித்து, மதநூல்களை ஆராய்ந்து, அவற்றின் அடிப்படையில் சமஸ்த கேரள ஜமியத்துல் உலமா அமைப்பு முடிவு எடுக்கிறது என்று தெரிவித்தாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.