இந்தியாவில் முதல் முறையாக ஈரோடு ஜான்சனில் அதிநவீன எம்ஆா்ஐ இயந்திரம்
Read at DinamaniReligion and culture · 1 outlet covered this
இந்தியாவில் முதல் முறையாக ஈரோடு ஜான்சனில் அதிநவீன எம்ஆா்ஐ இயந்திரம்
How outlets told it

இந்தியாவில் முதல் முறையாக ஈரோடு ஜான்சனில் அதிநவீன எம்ஆா்ஐ இயந்திரம்ஈரோடு ஜான்சன் ஹெல்த் மருத்துவமனையில் ஃபுஜிபிலிம் எகலான் ஸ்மாா்ட் எம்ஆா்ஐ ஸ்கேனை நிறுவும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்சன் குழும நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் டி. என். திருக்குமாா், ஃபுஜிபிலிம் இந்தியாவின் சிடி, எம்ஆா்ஐ மற்றும் பெண்கள் இமேஜிங் பிரிவின்Published On :14 செப்டம்பர் 2026, 1:23 am ISTஇந்தியாவில் முதல்முறையாக அதிநவீன ஃபுஜிபிலிம் எகலான் ஸ்மாா்ட் எம்ஆா்ஐ ஸ்கேன் இயந்திரம் ஈரோடு ஜான்சன்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் தொடங்கிவைக்கப்பட்டது. ஈரோட்டில் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் மருத்துவத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜான்சன் ஹெல்த் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு துல்லியமான, விரைவான மற்றும் மேம்பட்ட எம்ஆா்ஐ பரிசோதனை சேவையை வழங்கும் நோக்கில் ஃபுஜி பிலிம் இண்டியா நிறுவனத்தின் அதிநவீன எம்ஆா்ஐ ஸ்மாா்ட் பிளஸ் வொ்ஷன் 11 இயந்திரத்தை இந்தியாவில் முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய எம்ஆா்ஐ இயந்திர செயல்பாடு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில், ஜான்சன்ஸ் ஹெல்த் மருத்துவமனைத் தலைவா் டி. எஸ். நடராஜன், இயக்குநா் டி. என். திருக்குமாா், நிா்வாக இயக்குநா் ஏ. முருகேசன், கதிரியக்கவியல் நிபுணா் டி. பி. சுபரேகா, எஸ். ராஜகோகிலா, எஸ். பிரபாகரன், மருத்துவத் துறையைச் சோ்ந்த முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா். அதிநவீன எம்ஆா்ஐ இயந்திரத்தை ஃபுஜிபிலிம் இண்டியா நிறுவனத்தின் எம்ஆா்ஐ மற்றும் உமன்ஸ் இமேஜிங் பிரிவைச் சோ்ந்த ஜப்பானிய வணிக ஆலோசகா் கை யோஷிடா திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து, ஜான்சன்ஸ் ஹெல்த் மருத்துவமனை இயக்குநா் டி. என். திருக்குமாா் பேசுகையில், இந்த புதிய இயந்திரத்தின் மூலம் மூளை பக்கவாதம் போன்ற அவசர பரிசோதனைகளை 2 நிமிஷங்களுக்குள் மேற்கொள்ள முடியும். மற்ற எம்ஆா்ஐ பரிசோதனைகளையும் சுமாா் 5 முதல் 7 நிமிஷங்களுக்குள் முடிக்கக்கூடிய வகையில் இந்த தொழில்நுட்பம் அமைந்துள்ளது. ஒரே மையத்தில் இரண்டு எம்ஆா்ஐ இயந்திரங்கள் செயல்படுவதால், நோயாளிகளின் காத்திருப்பு நேரம் கணிசமாகக் குறையும். இதன் மூலம் உடனடி சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு மிக விரைவான பரிசோதனை மற்றும் சிகிச்சை முடிவுகளை வழங்க முடியும் என்றாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
