Politics · 1 outlet covered this

கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்!

How outlets told it

Dinamani652d ago

கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்!

Read at Dinamani
கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்!
Photo: Dinamani

கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு அமைச்சர் வினோத் முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேளாண் துறை அமைச்சர் வினோத் கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வளையப்பேட்டை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின. இதில் வாகனங்களில் பயணித்த நான்கு பேர் பலத்த காயமடைந்து சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். முக்கியமான ஆய்வுக் கூட்டத்திற்கு அவசரமாகச் சென்று கொண்டிருந்தபோதிலும், விபத்தைக் கண்டவுடன் சிறிதும் யோசிக்காமல் அமைச்சர் தனது காரை உடனடியாக நிறுத்தி உள்ளார். காரில் இருந்து கீழே இறங்கிய அவர், தனக்குப் பாதுகாப்பாக வந்த காவல்துறையினர் மற்றும் கட்சி நிர்வாகிகளின் உதவியோடு காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி செய்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்து, காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அவர்கள் பாதுகாப்பாக ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பப்பட்டதை உறுதி செய்த பிறகே, அமைச்சர் அங்கிருந்து தஞ்சை கூட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அவசரப் பணியிடையே மனிதநேயத்துடன் களத்தில் இறங்கி உதவிய அமைச்சரின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.