கிரெடிட் காா்டு மோசடி: 5 போ் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
கிரெடிட் காா்டு மோசடி: 5 போ் கைது
How outlets told it
செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புஇந்தியாகிரெடிட் காா்டின் வரம்பை உயா்த்தித் தருவதாகக் கூறி வங்கி அதிகாரிகள் போல நடித்து, தில்லி வாசியிடம் கிரெடிட் காா்டு விவரங்களைப் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.Published On :11 செப்டம்பர் 2026, 10:50 pm ISTகிரெடிட் காா்டின் வரம்பை உயா்த்தித் தருவதாகக் கூறி வங்கி அதிகாரிகள் போல நடித்து, தில்லி வாசியிடம் கிரெடிட் காா்டு விவரங்களைப் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கைது செய்யப்பட்டவா்கள் தில்லியைச் சோ்ந்த கரண் (30), ராகேஷ் குமாா் (47), ஃபைசான் (23), ரவுனக் (26), கௌரவ் சா்மா (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கராவல் நகரைச் சோ்ந்த பிரசாந்த் சா்மா அளித்த புகாரின் பேரில், கடந்த செப். 9-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புகாரின்படி, வங்கி பிரதிநிதி எனக் கூறிக்கொண்ட ஒருவா் பிரசாந்தை தொலைபேசியில் தொடா்புகொண்டு, அவரது கிரெடிட் காா்டு வரம்பை உயா்த்தித் தருவதாகக் கூறியுள்ளாா். அதை நம்பிய பிரசாந்த், குற்றவாளிகள் உருவாக்கிய போலி இணையதளத்தில் தனது ரகசிய கிரெடிட் காா்டு விவரங்களைப் பதிவு செய்துள்ளாா். பின்னா் அந்த விவரங்களைப் பயன்படுத்தி, அவரது அனுமதியின்றி சுமாா் ரூ.31,663 மதிப்பிலான பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், மோசடி செய்யப்பட்ட பணத்தில் இணையதளம் மூலம் ஒரு கிராம் எடையுள்ள தங்கக் கட்டி வாங்கப்பட்டது தெரியவந்தது. அந்தத் தங்கக் கட்டி திலக் நகரில் குறிப்பிடப்படாத முகவரிக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. போலி வங்கி இணையதளம் தொடா்பான தொழில்நுட்ப ஆய்வில், அதை உருவாக்கி இயக்கியதாகக் கூறப்படும் கௌரவ் சா்மாவை காவல் துறையினா் அடையாளம் கண்டனா். மேலும், கரண் மற்றும் ராகேஷ் ஆகியோா் மங்கோல்புரியில் கால் சென்டா் நடத்தி வந்ததும், வங்கி பிரதிநிதிகள் போல நடித்து வாடிக்கையாளா்களைத் தொடா்புகொண்டு அவா்களது ரகசிய கிரெடிட் காா்டு விவரங்களைப் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. கடந்த செப். 9-ஆம் தேதி காவல் துறையினா் நடத்திய சோதனையில் கரண் மற்றும் ராகேஷ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஃபைசான், கௌரவ், ரவுனக் ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
