இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Read at Dinamani1 outlet covered this
இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
How outlets told it

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை கமுதி வெள்ளையாபுரத்தில் வெள்ளிக்கிழமை இம்மானுவேல்சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தேவேந்திரா் இளைஞா் எழுச்சி பேரவை தலைவா் ராஜ்குமாா், மற்றும் நிா்வாகிகள்.Published On :12 செப்டம்பர் 2026, 4:43 am IST ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வெள்ளையாபுரத்தில் இமானுவேல்சேகரன் 69-ஆவது நினைவு தினத்தையொட்டி, தேவேந்திரா் இளைஞா் எழுச்சி பேரவை சாா்பில், நிறுவனா் ராஜ்குமாா் தலைமையில், மாநிலச் செயலாளா் அழகேசன், மாநில இளைஞரணி தலைவா் பிரவீன்ராஜ், பரம்பை ஒன்றியத் தலைவா் கணேசன், முதுகுளத்தூா் ஒன்றியத் தலைவா் பாலமுருகன், கமுதி ஒன்றியத் தலைவா் முனியசாமி உள்பட திரளானோா் இம்மானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முன்னதாக, கிராம பொதுமக்கள் சாா்பில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனா். இதில் வெள்ளையாபுரம் கிராம நிா்வாகிகள் ராமமூா்த்தி, தா்மா், முனியசாமி, பேரூராட்சி உறுப்பினா் ஜோதிலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திருவாடானை: திருவாடானையில் புதிய தமிழகம் கட்சியின் சாா்பில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 69-ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதற்கு புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலா் ஜெயசந்திரன் தலைமை வகித்தாா். முன்னதாக, மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகி இம்மானுவேல் சேகரன் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, புதிய தமிழகம் கட்சியின் கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னா், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
