Education and jobs · 1 outlet covered this

அரேபியாவில் இருந்து வந்த சூபி ஞானிகள்... இன்று பல மதத்தினரின் நம்பிக்கை தலமாக திகழும் ஆத்தங்கரை

How outlets told it

News18 Tamil653d ago

அரேபியாவில் இருந்து வந்த சூபி ஞானிகள்... இன்று பல மதத்தினரின் நம்பிக்கை தலமாக திகழும் ஆத்தங்கரை

Read at News18 Tamil
அரேபியாவில் இருந்து வந்த சூபி ஞானிகள்... இன்று பல மதத்தினரின் நம்பிக்கை தலமாக திகழும் ஆத்தங்கரை
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeஅரேபியாவில் இருந்து வந்த சூபி ஞானிகள்... இன்று பல மதத்தினரின் நம்பிக்கை தலமாக திகழும் ஆத்தங்கரைReported by:S SanthanakumarPublished by:pradeepa mLast Updated:Sep 11, 2026 11:06 AM ISTதிசையன்விளை அருகே நம்பியாற்றங்கரையில் அமைந்துள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் பல்வேறு மதங்களை சேர்ந்த மக்கள் வழிபடும் முக்கிய ஆன்மிக தலமாக விளங்கி வருகிறது.1/6திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை ஒட்டி நம்பியாற்றங்கரையில் அமைந்துள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் மத நல்லிணக்கத்துக்கும் ஆன்மிக நம்பிக்கைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பல்வேறு மதங்களை சேர்ந்த பொதுமக்களும் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். நோய்வாய்ப்பட்டவர்கள் செய்வினை பாதிப்பு இருப்பதாக நம்புபவர்கள் உள்ளிட்ட பலர் இங்கு தங்கி வழிபட்டு குணமடைந்து செல்வதாக நம்பப்படுகிறது.2/6தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். முற்காலத்தில் ஹஸ்ரத் ஷேக் முகமது மற்றும் ஹஸ்ரத் சையத் அலி பாத்திமா ஆகிய இருவரும் அரேபியாவில் இருந்து கப்பலில் வந்தபோது புயல் காற்றில் சிக்கி கப்பல் சேதமடைந்து திசையன்விளையை ஒட்டிய கடற்பகுதியில் தரைதட்டி நின்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இந்த பகுதியிலேயே தங்கி மத போதனைகளையும் அருள்வாக்குகளையும் வழங்கி வந்ததாக நம்பப்படுகிறது.3/6அவர்கள் மறைவுக்கு பின்னர் இருவருக்கும் தனித்தனியாக கல்லறைகள் அமைக்கப்பட்டு அதன் மீது பள்ளிவாசல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் சூபி ஞானிகளாக பக்தர்களால் போற்றப்படுகின்றனர். பழமை மாறாமல் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் அதன் கட்டிடக்கலைக்கும் பெயர் பெற்றதாக விளங்குகிறது. இரண்டு குவி மாடங்கள், மினார்கள், நூறு தூண்கள் கொண்ட கட்டிடம் மற்றும் புனித நீர் தொட்டி உள்ளிட்டவை இங்கு உள்ளன. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் கந்தூரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.4/6விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலத்தில் பள்ளிவாசல் டிரஸ்டிகள் பாரம்பரிய உடை அணிந்து தலையில் கிரீடம் வைத்து ஊர்வலமாக சென்று ராமன்குடி, முத்துகிருஷ்ணாபுரம், அருணாசலம் நாடார் வீடு உள்ளிட்ட இடங்களில் குடும்பத்தினர் அளிக்கும் மரியாதையை ஏற்றுக்கொள்வது நீண்டகால பாரம்பரியமாக இருந்து வருகிறது. கந்தூரி விழாவின்போது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுவதுடன் இஸ்லாமிய இசை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகளும் நடைபெறும்.5/6இந்த நிகழ்வுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பல பெண் குழந்தைகளுக்கு சையத் அலி பாத்திமா என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பதும் இத்தலத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. மேலும் வியாபாரிகளும் பொதுமக்களும் தங்களது கடைகள் மற்றும் வீடுகளில் பள்ளிவாசலின் படத்தை வைத்து வழிபடுவதாக கூறப்படுகிறது.6/6ஆத்தங்கரை பள்ளிவாசல் மூலம் ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவ வசதிகளும் செய்து வரப்படுகின்றன. இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் பல்வேறு சமூகங்களை சேர்ந்த மக்கள் தொடர்ந்து வந்து செல்கின்றனர். தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பள்ளிவாசல் திறந்திருக்கும். திருநெல்வேலி, வள்ளியூர், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திசையன்விளைக்கு பேருந்து வசதிகள் உள்ளன.