தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது! இன்றைய நிலவரம் (செப். 11)
Read at DinamaniWeather and environment · 1 outlet covered this
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது! இன்றைய நிலவரம் (செப். 11)
How outlets told it

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 11) சவரனுக்கு அதிரடியாக ரூ. 1,920 குறைந்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக உலக நாடுகள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை அவ்வப்போது குறைந்தாலும் பெரும்பாலும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வரும் நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 480 குறைந்து செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்து புதன்கிழமை சவரனுக்கு ரூ. 1,000 குறைந்த நிலையில் வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 880 உயர்ந்தது. இன்றைய தங்கம் நிலவரம்இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 11) கிராமுக்கு ரூ. 240 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,015 -க்கும் சவரனுக்கு ரூ. 1,920 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,12,120 -க்கும் விற்பனையாகிறது. இன்றைய வெள்ளி நிலவரம்வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 245 -க்கும் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 10,000 குறைந்து ரூ. 2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
