Religion and culture · 1 outlet covered this

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு முதல்வர் விஜய் வருகை தருகிறாரா?

How outlets told it

Dinamani6515d ago

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு முதல்வர் விஜய் வருகை தருகிறாரா?

Read at Dinamani
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு முதல்வர் விஜய் வருகை தருகிறாரா?
Photo: Dinamani

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுத்திருப்பதாக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா கூறியுள்ளார். உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வருகிற செப். 17 ஆம் தேதியில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. கோயில் குடமுழுக்கு விழாவுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. குடமுழுக்கு விழாவின்போது, 5,000 போலீஸார் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபடவுள்ளனர். இதனிடையே, கோயில் குடமுழுக்கு விழாவுக்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் நிர்மல் குமார், எம்எல்ஏ-க்கள் மதார் பாதுருதீன், கருப்பையா, கோபிசன், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் ராஜேந்திரன், அறங்காவலர் செல்லையா, கோயில் இணை ஆணையர் செல்லத்துரை உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இந்த நிலையில், மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் முதல்வர் விஜய் கலந்துகொள்வாரா என மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். செய்தியாளர்களுக்குப் பதிலளித்துப் பேசிய முஸ்தபா எம்எல்ஏ, "மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ளுமாறு முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம். எங்கள் கோரிக்கையை ஆலோசித்து, முதல்வர் முடிவுசெய்து, விழாவில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படலாம்" என்று தெரிவித்தார்.