லண்டன் | நடிகர் அஜித் கலந்துகொள்ளும் கார் ரேஸ் - தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!
Read at Puthiya ThalaimuraiPolitics · 1 outlet covered this
லண்டன் | நடிகர் அஜித் கலந்துகொள்ளும் கார் ரேஸ் - தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!
How outlets told it

தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்வர் விஜய், கடந்த செப்டம்பர் 10-ம் தேதி சென்னையில் இருந்து பிரிட்டன் கிளம்பினார். அடுத்த நாள், லண்டன் விமான நிலையம் சென்றடைந்த முதல்வருக்கு பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு, 6 நாள் சுற்றுப் பயணம் செய்யவுள்ள அவர், செப்டம்பர் 16 தேதி லண்டனில் இருந்து கிளம்பி சென்னை வரவுள்ளார். முதல்வர் விஜய்Pt webஇதற்கிடையில் தான், இங்கிலாந்தில் நடிகர் அஜித் பங்கேற்கும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை பச்சை கொடியசைத்து முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இந்த கார் பந்தய போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 9.45 மணிக்கு தொடங்கி 11.45 மணிக்கு நிறைவடைகிறது. மேலும், இங்கிலாந்தில் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டை முதல்வர் விஜய் நேரில் பார்வையிடுகிறார். இந்த லண்டன் நிகழ்வின் போது முதல்வர் விஜய், அஜித்தைச் சந்தித்து உரையாடவுள்ளார் என்ற தகவல் இரு தரப்பு ரசிகர்களிடையேயும் பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
