‘மு.க.ஸ்டாலினைப் போல் கூட்டணி கட்சிகளை அரவணைத்த தலைவர் இந்தியாவிலேயே கிடையாது’ - முன்னாள் அமைச்சர் ரகுபதி
Read at Daily ThanthiPolitics · 1 outlet covered this
‘மு.க.ஸ்டாலினைப் போல் கூட்டணி கட்சிகளை அரவணைத்த தலைவர் இந்தியாவிலேயே கிடையாது’ - முன்னாள் அமைச்சர் ரகுபதி
How outlets told it

Published on: 12 Sep 2026, 3:22 pmசென்னை, சென்னையில் முன்னாள் அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-“தி. மு. க. தலைவர், முன்னாள் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினைப் போல் கூட்டணி கட்சிகளை 2019 தேர்தலில் இருந்து அரவணைத்துப் போன ஒரு தலைவர் இந்தியாவிலயே கிடையாது. கூட்டணி கட்சிகளுக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதை அவர் கொடுத்தார். என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார். அத்தனை பேரும் புகழ்ந்தார்கள். அப்படித்தான் நாங்கள் நடந்து கொண்டோம். இன்னைக்கு கூட்டணியை விட்டு வெளிய வந்த பிறகு அவர்கள் எங்களை பாராட்ட மாட்டார்கள். இருப்பினும் இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாளவனிடம் இருக்கிறதா? அல்லது முதல்-அமைச்சர் விஜய்யிடம் இருக்கிறதா? என்பதை திருமாவளவன் தெளிவுபடுத்த வேண்டும்.”இவ்வாறு அவர் தெரிவித்தார்.
