Accidents · 1 outlet covered this

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; 9 பேர் பலி

How outlets told it

Dinamalar6534h ago

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; 9 பேர் பலி

Read at Dinamalar
உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; 9 பேர் பலி
Photo: Dinamalar

ADDED : செப் 13, 2026 06:34 AM ADDED : செப் 13, 2026 06:34 AM அ நிறம் | அளவு​கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா விடிய விடிய நடத்திய ட்ரோன் தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; பலர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.​விடிய விடிய குண்டு மழை: உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைனின் குடியிருப்புப் பகுதிகள், துறைமுகங்கள், உணவு கிடங்குகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.​9 பேர் பலி: நேற்று ​ஒரே நாளில் மட்டும் ரஷ்யா சுமார் 500க்கும் மேற்பட்ட டிரோன்களால் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் பலியாயினர். பச்சிளம் குழந்தை உட்பட 37 பேர் படுகாயமடைந்தனர். பொருளாதாரத்தை அழிக்க சதி: ஜெலன்ஸ்கி உக்ரைனின் பொருளாதாரத்தை அடியோடு சிதைக்கவே புதின் படைகள் பொதுமக்களின் கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்குவதாக அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது: போர்க்களத்தில் வெற்றி பெற முடியாத ரஷ்யா, தனது போரை உக்ரைனின் பொருளாதாரத்தை நோக்கி திருப்பியுள்ளது. மருந்தகங்கள், ரயில்கள், தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய கிடங்குகளை அழித்து எங்கள் மக்களின் மன உறுதியை உடைக்கப் பார்க்கிறது. ரஷ்யாவின் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் தகுந்த கண்டனமும் பதிலடியும் தர வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.