World · 1 outlet covered this

உலகளாவிய எரிசக்தி, உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்க தயார்: ரஷ்ய அதிபர் புடின் உறுதி

How outlets told it

Dinamalar652d ago

உலகளாவிய எரிசக்தி, உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்க தயார்: ரஷ்ய அதிபர் புடின் உறுதி

Read at Dinamalar
உலகளாவிய எரிசக்தி, உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்க தயார்: ரஷ்ய அதிபர் புடின் உறுதி
Photo: Dinamalar

/செய்திகள்/இந்தியா/ உலகளாவிய எரிசக்தி, உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்க தயார்: ரஷ்ய அதிபர் புடின் உறுதி ADDED : செப் 12, 2026 01:48 PM ADDED : செப் 12, 2026 01:48 PM அ நிறம் | அளவுபுதுடில்லி: உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பிற்குப் பங்களிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக அதிபர் புடின் தெரிவித்தார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற டில்லி வந்துள்ள அதிபர் புடின் நிருபர்களிடம் கூறியதாவது: ரஷ்யா ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தவில்லை, அதேபோல் அச்சுறுத்தப் போவதில்லை. ஐரோப்பாவுடன் மோதலுக்கு ரஷ்யாவிற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இரண்டாம் உலகப் போரின் விளைவாக அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டன. உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பிற்குப் பங்களிக்க ரஷ்யா தயாராக இருக்கிறது. பிரிக்ஸ் கூட்டமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல. ரஷ்யா முழு உலகத்துடனும் இணைந்து செயல்படத் தயாராக உள்ளது; இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா சுதந்திரமான மற்றும் இறையாண்மைமிக்க கொள்கையைக் கொண்டுள்ளது. உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. உலகப் பொருளாதாரத்தில் ஜி7 நாடுகளின் பங்கு பல ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. இவ்வாறு ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.