தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்
Read at DinamaniPolitics · 1 outlet covered this
தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்
How outlets told it

இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடவுள்ளதால், தவெக ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ. சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, லெனினிஸ்ட் கட்சிகள் இணைந்து, இடதுசாரி கூட்டணியில் தனித்துப் போட்டி என்ற முடிவு மாநிலக் குழுவில் எடுக்கப்பட்டுள்ளது.
இடதுசாரி கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக்குப் பிறகு செப். 15 ஆம் தேதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெறும். இந்த இடைத்தேர்தலுக்கு திமுக அணி, அதிமுக அணி, தவெக அணி என்ற மூன்று அணி வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இதில், எந்த அணியிலும் இடதுசாரிகள் இல்லை, நடைபெறவிருக்கும் தேர்தல் என்பது பொதுத்தேர்தலோ அல்லது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலோ இல்லை. மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல்.
தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. வெளியில் இருந்து தவெக அரசுக்கான ஆதரவு தொடரும்.
இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி என்ற முடிவால், தவெக ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்த நிலைப்பாடு திமுகவுக்கு ஆதரவு என்பது தவறானது, மூன்று அணிக்கு எதிராகத்தான் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்” என்றார்.
Marxist Party State Secretary P. Shanmugam has stated that there is no threat to the TVK government, as the Communist parties are set to contest the by-election independently.
தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு
