World · 1 outlet covered this

'ஆமாம் டோட்டலா காலிதான்..' உண்மையை ஒப்புக்கொண்ட அமெரிக்கா.. உச்சகட்ட மகிழ்ச்சியில் ஈரான் படைகள்!

How outlets told it

Puthiya Thalaimurai1002d ago

'ஆமாம் டோட்டலா காலிதான்..' உண்மையை ஒப்புக்கொண்ட அமெரிக்கா.. உச்சகட்ட மகிழ்ச்சியில் ஈரான் படைகள்!

Read at Puthiya Thalaimurai
'ஆமாம் டோட்டலா காலிதான்..' உண்மையை ஒப்புக்கொண்ட அமெரிக்கா.. உச்சகட்ட மகிழ்ச்சியில் ஈரான் படைகள்!
Photo: Puthiya Thalaimurai

Published on: 11 Sep 2026, 2:00 pmதங்களுடைய கடற்படைத் தளத்தை ஈரான் அழித்திருப்பதாக அமெரிக்காவே ஒப்புக்கொண்டிருப்பது ஈரானுக்கு அதிக அளவில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம், ஈரான் தாக்குதலில் பஹ்ரைன் கடற்படைத் தளம் சேதமடைந்திருப்பதை அமெரிக்காவே ஒப்புக்கொண்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடர்ந்தன. இடையில் சில நாட்கள் நிறுத்தப்பட்ட நிலையில், அது, மீண்டும் இன்றுவரை தொடர்கிறது. இந்த நிலையில், ஈரான் தாக்குதலில் பஹ்ரைன் கடற்படைத் தளம் சேதமடைந்திருப்பதை அமெரிக்காவே ஒப்புக்கொண்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. Model imagechat gptபஹ்ரைனின் மனாமா (Juffair) பகுதியில் அமைந்துள்ள 'கடற்படை ஆதரவுத் தளம்' (Naval Support Activity Bahrain), மத்திய கிழக்கில் அமெரிக்கக் கடற்படையின் மிக முக்கிய மையமாகவும், 5-ஆவது ஃபிளீட்டின் (U.S. Fifth Fleet) தலைமையகமாகவும் செயல்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz), பாப் அல்-மந்தெப் (Bab el-Mandeb) மற்றும் சூயஸ் கால்வாய் ஆகிய உலகளாவிய முக்கிய எண்ணெய் மற்றும் வணிகப் போக்குவரத்து பாதைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் முதன்மைப் பணியாகும். இந்தச் சூழலில்தான் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 5-ஆவது ஃபிளீட் தலைமையகம் கடுமையாகச் சேதமடைந்தது. இதை தற்போது அமெரிக்காவே ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்கக் கடற்படையின் தற்காலிகச் செயலாளர் ஹங் காவோ (Hung Cao), "பஹ்ரைன் கடற்படைத் தளத்தை ஈரான் மிகக் கடுமையாகச் சேதப்படுத்திவிட்டது" என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இச்சேதம் காரணமாக அமெரிக்கப் போர்க்கப்பலான 'யு. எஸ். எஸ் ஆபிரகாம் லிங்கன்' (USS Abraham Lincoln) அங்கே கரை ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள அமெரிக்க வீரர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதும் தெரிய வந்துள்ளது. மொஜ்தபா காமேனி, ட்ரம்ப்reuters, chat gptஎனினும், இத்தளத்தை மீண்டும் சீரமைப்பதா அல்லது வேறு பகுதிக்கு மாற்றுவதா என்பதைத் தீர்மானிக்க அமெரிக்கக் கடற்படை சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. அதேநேரத்தில், அமெரிக்காவே இந்த விஷயத்தை ஒப்புக்கொண்டிருப்பதை ஈரான் வரவேற்றுள்ளது. இதனால், ஈரான் இன்னும் அதிக சந்தோஷத்தில் உள்ளது.