இந்தியா- ஆப்கானிஸ்தான் முதலாவது டி20 போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
Read at Daily ThanthiSports · 1 outlet covered this
இந்தியா- ஆப்கானிஸ்தான் முதலாவது டி20 போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
How outlets told it

Published on: 11 Sep 2026, 9:33 am புதுடெல்லி, இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு 12, 13 ஆகிய தேதிகளில் நடப்பதால் முதலாவது 20 ஓவர் போட்டி அட்டவணையை மாற்றம் செய்யும்படி போக்குவரத்து போலீஸ் வேண்டுகோள் விடுத்து இருந்தது. இந்த நிலையில் டெல்லி போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளை, கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில், போட்டி நடைபெற தேவையான அனைத்து போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா- ஆப்கானிஸ்தான் முதலாவது 20 ஓவர் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று டெல்லி கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
