ஏ.ஐ., தொழில்நுட்பம் மனிதர்களை கொல்லக்கூடும்: வளர்ச்சி வேகத்தை கட்டுப்படுத்த நிறுவனங்கள் திட்டம்
Read at DinamalarScience and tech · 1 outlet covered this
ஏ.ஐ., தொழில்நுட்பம் மனிதர்களை கொல்லக்கூடும்: வளர்ச்சி வேகத்தை கட்டுப்படுத்த நிறுவனங்கள் திட்டம்
How outlets told it

இது குறித்து, 'ஆந்த்ரோபிக்' தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடெய், அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி: ஜேக்கப் காக்சன் கூறிய கருத்துடன் நான் அதிகமாக உடன்படுகிறேன். அவர் ஆந்த்ரோபிக்கை விட்டு வெளியேறியபோது, 'ஆந்த்ரோபிக் தான் மிகவும் பொறுப்புடன் செயல்படும் நிறுவனம்; இந்த பிரச்னைகளை மிகவும் நன்றாக உணர்ந்துள்ள நிறுவனமும் அதுதான்' என்றார். அவர் எங்களை குறை கூறவில்லை. ஒட்டுமொத்த ஏ. ஐ., துறையும் மிக வேகமாக முன்னேறுவதை பற்றித்தான் அவர் கவலை தெரிவித்தார். ஏ. ஐ., மனிதர்களை அழிக்கும் என்பதற்கு எத்தனை சதவீதம் சாத்தியம் என்று கேட்டால், அதற்கு பதிலில்லை. அதன் பாதைகள் எங்கு செல்கின்றன என்பதை பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். நாம் சரியான பாதையில் சென்றால், தவறு நடப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. தவறான பாதையில் சென்றால், அந்த வாய்ப்பு மிக அதிகமாக இருக்கலாம். எனவே, சரியான பாதையை தேர்வு செய்யும் நம் திறனில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு ஏ. ஐ., துறை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உலக நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். நாம் மிகவும் மெதுவாக இத்துறையில் முன்னேறினாலும், தவறான நபர்களின் கைகளில் இந்த தொழில்நுட்பம் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அப்போது விபரீதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.